பெண்: அப்பா நான் சாதிக்க விரும்புறேன்
அப்பா: நல்லது எந்த துறையிலமா?
பெண்: அப்பா நான் விரும்புற பையன் பேரு ‘சாதிக்’பா
வாடகையாள: ஹோட்டல் மேனேஜரா, உடனே ரூமுக்கு வாங்க என் மனைவி ஜன்னல் வழியா குதிச்சு தற்கொலை பண்ணிக்கபோரா சார்.
மேனேஜர்: அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?
வாடகையாளர்: யோவ் ஜன்னல் திறக்கமாட்டேங்குதுயா.
பெண்: நீ மட்டும் எனக்கு புருசனா வந்தா கண்டிப்பா காபில விஷத்த போட்டு கொடுத்துருவேன்
ஆண்: கண்டிப்பா நீ மட்டும் பொண்டாட்டியா வந்தா நான் அதை குடிச்சிடுவேன்
கஸ்டமர்: ஏன் இன்னைக்கு எல்லாருக்கும் இலவசமா ஸ்வீட்ஸ் எல்லாம் தரீங்க உங்க ஹோட்டல்ல எதாவது விசேஷமா?
சர்வர்: Annual Clearance sir.
சின்னப்பையனும் இரு விற்பனைப்பெண்ணும்
சின்னபையன்: நான் பெரியவனான நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக்குவீங்களா?
விற்பனைபெண்: சரி பண்ணிக்கிறேன்
சின்னபையன்: அப்படின்னா உங்க வருங்கால கணவருக்காக இலவசமா ஒரு சாக்லேட் தருவீங்களா?
மனைவி: பின்னாடி ஃபிகர் இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான் நீங்க சிரிக்கிரீங்க
கணவன்: உன்னைப்போய் ஃபிகர்ன்னு சொல்றான் அவனுக்கு தான் கண்ணு தெரியல.
கணவன்: நீ தான் எனக்கு மனைவியா வருவேன்னு எங்க வாத்தியாருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: மாடு மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அப்பவே சொன்னார்.
கணவன்: காபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே என்ன போட்டிருக்கே காபில?
மனைவி: ஒரு டீஸ்பூன் டால்மியா சிமெண்ட் போட்டேன் அதான் ஸ்ட்ராங்கா இருக்கு.
டீச்சர்: மேக்ஸ் எக்ஸாம் எழுத சொன்னா ஏண்டா டான்ஸ் ஆடுற?
மாணவன்: ஒவ்வொரு ஸ்டெப்புக்கு மார்க் உண்டுன்னு நீங்க தானே டீச்சர் சொன்னீங்க
வடிவேலு: இந்த நோக்கியா செல்லுல எந்த கார்டு வேணும்னாலும் போட்டு பேசலாம்
பார்த்திபன்: அப்படியா?
வடிவேலு: ஆமா
பார்த்திபன்: அப்படின்னா இந்த ‘ரேஷன் கார்டு “ போட்டு பேசமுடியுமா
எல்.கே.ஜி பாய்: டீச்சர் என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க
டீச்சர்: ஸ்வீட் பாய்
எல்.கே.ஜி பாய்: மச்சான் சொன்னேன்ல அவ எனக்கு ரூட் விட்ரா டா.
வடிவேலு: என்னோட பேக்கரியில எல்லாவகையான பன்னும் விக்கிறேன் எதுவேணும்னாலும் நீங்க சாப்பிடலாம்
பார்த்திபன்: எல்லாவகையான பன்னும் இருக்கா
வடிவேலு: இருக்கே
பார்த்திபன்: ரிப்பன் ரெண்டுகிலோ கார்பன் ஒரு கிலோ கொடுங்க
நித்தியானந்தாவும் தாத்தாவும்
தாத்தா: தமிழ் மொழியை விட சிறந்த மொழி எது?
நித்தியானந்தா: உங்கள் மகள் கனிமொழி தான் அய்யா
எல்.கே.ஜி பாய்1: டேய் மச்சான் எக்ஸாம்க்கு பிட்டு எடுத்துட்டு போனியே என்னாச்சு?
எல்.கே.ஜி பாய்2: அதை ஜட்டிக்குள்ள வைச்சு எடுத்துட்டு வந்தேன். அது தெரியாம உச்சா போய்ட்டேன்டா
கலக்கல் நகைச்சுவை...
ReplyDelete