Sunday, January 24, 2010

சமையல் குறிப்பு

அம்மா கை புரெடக்‌ஷன்ஸ் வழங்கும்

வெள்ளை நாயகன்
ரவை

நடிக்கும்

“அம்மா செஞ்ச உப்புமா”


நடிகர்கள்

ஹீரோ - ரவை

ஹீரோயின்ஸ் - தக்காளி

துணை நடிகர்கள் - இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி

வில்லன் - பச்சைமிளகாய்

இசை அமைப்பாளர் - கடுகு

சோக பாடல்கள் - வெங்காயம்

ஒளிப்பதிவாளர் - தீப்பெட்டி

ஒப்பனையாளர் - எண்ணெய்

சண்டைப்பயிற்சி - கரண்டி

காமெடி - உப்பு

இயக்கம் - அடுப்பு



விரைவில்

” உங்க அபிமான தட்டுகளில்”

காத்திருங்கள்

Tuesday, January 12, 2010

எண்ணவென்று தெரியாமல்......... - சுட்டது


என்னைஎன்னவென்று எண்ணாமல்என்னையெடுத்துரைக்கும் எண்ணமெல்லாம்ஏனோவென்று எண்ணிய காலங்களில்ஏனோ எண்ணத்தோன்றவில்லை எண்ணுவதற்கு
என்னை என்னவென்று எண்ணித்தோன்றிஎன்னை யெண்ணாமல் இருந்த எண்ணங்களெல்லாம்எண்ணியெண்ணி எண்ணாமாட்டாதஎண்ணத்தால் அழிந்ததுவே
அழிந்ததும் அழிந்ததா, மெய்யோயென்றிருந்தஅகத்தையும் அழித்து விட்டேயழிந்ததுஅகமெல்லாம் வெறுமை நிறைந்தது போல்அகமும் புறமும் அழிந்ததுபோல் எண்ணம்
எண்ணத் தோன்றவில்லை எண்ணமும் தோன்றவில்லைஎல்லாமே ஓய்ந்தது. எண்ணாதிருக்க எண்ணிய நாள்.எங்கும் நிசப்தம். நிலைத்திருக்க நினைத்தபோதுஎண்ணித்தொடங்கியிருந்தேன் நான் மறுபடி ...............

வினோத்- கன்னியாகுமரி

Monday, January 11, 2010

முதல் பதிவுங்கோ................................

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ,

அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள்,

அது வேறொருவருடையதாகும்.

இந்த கீதாசாரத்தை முன்மொழியாகக் கொண்டு என் பதிவுகளை தொடர்கிறேன்