Saturday, November 27, 2010

இரண்டு கதைகள்

முத்து முருகேசுன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்களாம். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸாம். பள்ளிக்கூடம், காலேஜ், கேண்டீன் சினிமா எங்கே போனாலும் ஒன்னா தான் போவாங்களாம்


ஒரு நாள் ரெண்டு பேரோட பேமிலிஸும் டூர் போகனும்னு ப்ளான் பண்ணாங்களாம், ஆனா முத்து கடைசி நேரத்துல வர முடியாம நின்னுட்டார். முருகேசு டூரை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தாராம்.

அதுக்கப்புறம் ஒரு நாள் முருகேசு, முத்துவோட வீட்டுக்கு போனாராம், அங்கே முத்துவை பாத்து “ஏண்டா நீ டூருக்கு வரலை”ன்னு சண்டை போட ஆரம்பிச்சிட்டாராம்...

அடடே இதென்ன வம்பா போச்சுன்னு முத்து “இல்லடா எனக்கு உடம்பு சரியில்லை அதான் வரமுடியலை”ன்னு சமாதானம் சொல்ல ஆரம்பிச்சாராம்...

”அதெல்லாம் எனக்கு தெரியாது நீ ஏண்டா ப்ளான் பண்ணின டூருக்கு வரலை”ன்னு மல்லுக்கு நின்னு சண்டை போட்டராம் முருகேசு

இப்படியே சண்டை அதிகமாகி ரெண்டு பேரோட சட்டையும் கிழிஞ்சு போச்சாம்....

தத்துவம்: சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும் சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு.
____________________________________________________________________________
 
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..


அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம

“குப்புமி”


“குப்புமி”


“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...

இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை :))

இந்த உலகம் ஒரு கிழக்கழுதை மாதிரி:

ஒரு கிழவன் தன் வீட்டுல ஒரு கழுதை வளர்த்தாராம். எதிர்பாராம ஒரு நாள் தன் பேரனை கூட்டிக்கிட்டு மகனை பாக்க கிளம்பினாராம். கூடவே கழுதையும் கூட்டிட்டு போனாராம். போற வழியில கழுதை மேல தன் பேரை உட்காரவச்சி கூட்டிட்டு போனாராம்... வழியில போறவங்க சொன்னாங்களாம்“என்ன தம்பி உங்க தாத்தா வயசானவரா இருக்காரே அவரை கழுதை மேல உட்கார வச்சி நீ நடந்து போகக்கூடாதா’ன்னு.தாத்தாவும் யோசிச்சு தன் பேரனை நடக்க சொல்லி தான் கழுதை மேல ஏறிக்கிட்டு போய்ட்டு இருந்தாங்களாம்...கொஞ்ச தூரம் போன பிறகு அங்கிருந்தவங்க சொன்னாங்களாம்

“தாத்தா நீயாச்சும் நடந்து வரலாம், பாவம் சின்னபையன் நடக்க கஷ்டப்படுரானே அவனை கழுதை மேல ஏத்தி கூட்டிட்டு போனா என்ன”ன்னு..தாத்தாவும் என்னடா இது வம்பா போச்சுன்னு கீழே இறங்கிட்டாராம்...ரெண்டு பேரும் நடந்துட்டே கழுதையும் கூட்டிட்டு போனாங்களாம்...அங்கிருக்கவங்க சொன்னாங்களாம் ”கழுதையை பொதி சுமக்க தானே வளர்த்தீங்க இப்படி சும்மா கூட்டிட்டு போனா கழுதை உங்க பேச்சை கேக்காது”ன்னு.தாத்தாவும் பேரனும் ரெண்டு பேருமே கழுதை மேல ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் பயணம் செஞ்சாங்களாம்...

அந்த வழியில போரவங்க சொன்னாங்களாம் “பாவம் அந்த கழுதை மேல ரெண்டு பேரும் ஏறி உட்கார்ந்திருக்கீங்க அந்த கழுதை என்னத்துக்கு ஆகுரது”ன்னு திட்டினாங்களாம்..இப்படி இந்த உலகம் நாம என்ன செஞ்சாலும் அதுக்கு எதாவது ஒரு குறை சொல்லிட்டே இருக்கும்.. நாம தான் நம்முடைய வழியை சரியா நிர்ணயிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்கனும்...இப்படி செஞ்சாலும் வீட்டுல இருக்கரவங்க சொல்லுவாங்க ”சொன்ன பேச்சை கேக்குதா பாரு இதெல்லாம் எங்கேயிருந்து உருப்படப்போகுது” ன்னுஹ்ம்ம்

ஒன்னாங்கிளாஸ் சண்டை:: ஒரு சின்ன புனைவு

திங்கட்கிழமை காலைல நான், அழகா குளிச்சு தலையை எண்ணெய் சட்டியில முங்கி எடுத்து வழிச்சு வாரி விட்டு நெத்தியில திருநீரை நல்லா ஒரு வரிப்பட்டை மாதிரி இழுத்து கைல ஒரு துணிப்பை, அதுல ஒரு குட்டியா கரும்பலகை பைக்கு பேலன்ஸ் அந்த பலகை தான் சரியா இருக்கும் அந்தப்பையை வலது தோள்ல மாட்டிக்கிட்டு அம்மாகிட்ட போனேன்அம்மா குடுத்த ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு அண்ணாச்சி கடைக்கு போய் “தாத்தா எனக்கொரு பல்பம் வேணும்”னு முகத்தை சிணுங்கி வச்சிக்கிட்டு ஒரு ரூபாயை நீட்டினேன்.கடைக்காரரும் “இந்தாப்பா”ன்னு ஒரு விரல் நீள மண்ணுபல்பத்தை கையில குடுத்தார்....ஒரே நேர்பார்வையில வச்ச கண்ணு வாங்காம நான் க்ளாஸ்ல முதல் வரிசையில ரெண்டாவது ஆளா உட்கார்ந்தேன்...எல்லாப்பசங்களும் வரவரைக்கும் அமைதியா பலகையும் பல்பத்தையும் மாறி மாறி பாத்துகிட்டு அம்மூஞ்சி மாதிரி அமைதியா இருந்தேன் நான் ...

கொஞ்ச நேரத்துல பக்கத்துல ஒரு பையன் என்னை மாதிரியே எண்ணெய் வழிச்சு வாரிட்டு “ஹி ஹி ஹி”ன்னு சின்ன சிரிப்போட வந்து உட்கார்ந்தான்நான் கொஞ்ச நேரம் அங்கிட்டு இங்கிட்டு பாத்துட்டு பெப்பபே’ன்னு பேந்த பேந்த விழிச்சு பாத்துட்டு“ஹேய் இங்க பாத்தியா என்கிட்ட புது பல்பம் இருக்கே”ன்னு அசடு வழிய காட்டினேன் அவனிடம்அதுக்கு அவன் ”ஹை எங்கடா வாங்கினே புது பல்பம் இம்புட்டு நீளாமா இருக்கு” என்று உலக அதிசயத்தை முதல் முதலாக கண்டது போல் கண்களை நீளமாக விரித்து கேட்டான்.அவன் பார்வையை பாத்ததும் நான் அந்த பல்பத்தை சடக்கென்று சட்டைப்பைக்குள் எடுத்து ஒளித்துகொண்டேன்....சிறிது நேரத்திற்குள் பக்கத்திலிருந்தவன் பயத்தோடு “டேய் என் பல்பம் சின்னதா இருக்குடா உன் பல்பத்துல கொஞ்சம் உடைச்சி குடேன் நான் எழுதிட்டு தரேன்”“ம்ஹூம் தரமாட்டேன் போடா நான் இன்னிக்கு தான் இந்த பல்பம் வாங்கினேன் இதையே இந்த வாரம்புல்லா எளுதனும்னு எங்கம்மா சொல்லிருச்சு நான் தரமாட்டேன் போடா” என்றேன் நான்...”டேய் குட்ரா நான் வூட்டுப்பாடத்தைக்கூட எளுதலைடா கொஞ்சூண்டு குடேன்” என்று வாஞ்சையாக கேட்டும் தரவேயில்லை..கொஞ்ச நேரத்திற்கு அவனை ஒருவித ஏளன பார்வை பார்த்து மறுபடியும் “இங்க பாத்தியா என்கிட்டே முழுபல்பம் இருக்கே உனக்கு தரமாட்டேனே” என்று கையில் பல்பத்தோடு தூக்கி காட்டிடேன்அந்த நேரத்தில் தான் பக்கத்திலிருந்த அவன் தூக்கிப்பிடித்த கையிலிருந்து வெடுக்கென்று பல்பத்தை பிடுங்கப்போக, பல்பம் பாதியாக உடைந்து போகும்.......”அம்மே.......... என் பல்பம் ஏண்டா உடைச்சே என் பல்பத்தை” என்று நம்மவன் வகுப்பு என்றுகூட பார்க்காமல் புரண்டு புரண்டு அழ ஆரம்பித்தேன்“நான் கேக்கும்போதே நீ குடுத்திருந்தா பிடிங்கிருக்க மாட்டேன்ல” என்று சொன்னதும் நம்மவனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வர

பக்கத்திலிருந்து பேசியவனின் தலையில் சற்றும் எதிர்பாராமல் “நொங்ங்...”கென்று கொட்டினேன்...“டேய் என்னை ஏண்டா அடிக்கிறே”என்று அடுத்தவன் அவன் தலைமேல் கொட்டினேன்சிறிது நேரத்தில் இருவரும் அடிதடி, கிள்ளுவது, சட்டையை பிடிப்பது எல்லாசண்டைகளையும் போட்டிருப்பார்கள், கடைசியில் டீச்சர் வந்ததும் இருவரின் கண்களிலும் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடி அமைதியாக உட்கார்ந்திருந்தோம்..டீச்சர் “டேய் என்னடா இங்கே சண்டை, ஏண்டா நீ அழுவுரே” என்று ஹிட்லர் ஸ்டைலில் கேட்டார்..வாயைத்திறந்ததுமே “டீச்சர்ர்ர்ர்ர்ர் என் பல்பத்தை இவன் உடைச்சிட்டான் டீச்சர்” மூக்கில் தண்ணி வழியஓஓவென்று கத்தி ஆரம்பித்தேன்டீச்சர் ”ஏய் வாய மூடு எதுக்கு அழுவுறே இரு உன் பல்பத்தை அவன்கிட்ட இருந்த வாங்கித்தரேன்” என்று அவனை இரண்டு அடி அடித்து கையிலிருந்த பல்பத்தை பிடுங்கி என்னிடம் கொடுத்தார்....மறுபடி இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தோம்..

எக்ஸாம் பிட்ஸ்

கடைசி வரை தோழி வித்யா அவர்கள் பிட் எப்படி அடிப்பது என்றே சொல்லவில்லையாதலால் என் வாழ்வில் நான் பின்பற்றிய, சொல்லிக்கொடுத்த பிட் அனுபவங்களையும் அதன் வழிமுறைகளையும் இங்கே பகிருகிறேன். வித்யா தங்கச்சி நோட் திஸ் மா!!
1. முதல் பிட்டு சின்ன சின்ன பேப்பர் எடுத்துகிட்டு எழுதவேண்டிய சப்ஜெக்ட்டோட முதல் பாடத்துல வர முதல் கேள்விக்கான ஹெட் லைன்ஸ் எல்லாம் அந்த குட்டிபேப்பர்ல எழுதி பர்ஸ்ல வச்சிடுங்க (இதுக்கு பஸ் டிக்கட் மாதிரியான பேப்பர்களை யூஸ் பண்ணிக்கிறது நல்லது, ஏன்னா சப்போஸ் இன்விஜிலேட்டர் பாத்துட்டாங்கன்னா அவங்களுக்கே தெரியாம தூக்கிவீசியெறிய வசதியா இருக்கும்.)2. ஹால்டிக்கட்ல பின்னாடி மொக்கையான பென்சில்ல எழுதிக்கலாம், கேள்வித்தாள் கொடுத்ததும் அதுல ஹிண்ட்ஸையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அப்ரம் ஹால்டிக்கட்ல இருக்கரதையெல்லாம் அழிச்சிட்டு படிப்ஸ் மாதிரி எழுதிட்டு இருக்கலாம். கேள்வித்தாள் குடுத்ததும் உடனடியா செய்ர வேலை இது காலம் கடத்தினாலும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. கேள்வித்தாள்ல எழுதிட்ட பிறகு வந்து கேட்டா அப்ரம் மறந்துடும் சார் அதான் இப்பவே எழுதிவச்சிக்கிறேன்னு ஒரு ரீலை விடனும்3. மை பேனா இல்லைன்னா இங்க் பேனா இப்பல்லாம் யாரும் இங்க் பென் யூஸ் பண்ரதில்லை ஆனாலும் இங்க் பேனா பிட்டு அடிக்கிரதுக்கு பெஸ்ட். உள்ளங்கையில முக்கியமான கேள்விகள் வரைக்கும் தேர்ந்தெடுத்து எழுதிவச்சிக்கலாம், இதுல நிரைய எழுதிவைக்க முடியாது இருந்தாலும் ஹெட்டிங்க்ஸ், ஃபார்முலாஸ், படங்களையெல்லாம் வரைஞ்சு எழுதிவச்சிக்கலாம். எழுதிமுடிச்சுட்டு உள்ளங்கையை துடைச்சிட்டாலே போயே போச்சு பிட்டு, வியர்வை அதிகம் வரவங்க பிட்டை சீக்கிரமா நோட் பண்ணிவைக்கிறது நல்லது.4. எக்ஸாம் ஹால்ல இருக்கர பென்ச், சேர் டேபிள் சுவரையும் நம்ம பிட்டுக்காக பயன்படுத்திக்கலாம், சின்சியரா படிக்கும் (?!) படிக்கிர மாதிரி இருக்கும்போது டேபிள்ல சில நோட்சையெல்லாம் கிட்ட பாத்தமட்டும் தெரியரமாதிரி எழுதிவச்சிக்கலாம், இதுக்கு பென்சில், இங்க் பென் பெஸ்ட் அடுத்த எக்ஸாம்க்கும் எழுதிவைக்கனுமில்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு க்ளாஸ் ரூம்னா பிரச்சனையில்லை மை பென்லயே எழுதிவச்சிடலாம்.5. பக்கத்துல நல்ல படிக்கிர பொண்ணா பாத்து கரெக்ட் பண்ணி உட்காரவச்சிக்கோங்க அந்த பொண்ணு உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம், இல்லைன்னா இன்விஜிலேட்டர்க்கு தெரியாம அவ பேப்பரை வாங்கி எழுதிக்கலாம். இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருந்தா வாசன் ஐ கேர்ல போய் கண்ணாடி வாங்கிபோட்டுக்கிட்டு முன்னாடி பென்ச்ல எழுதரவங்களை பாத்து எழுதிக்கலாம்.இப்போ இருக்கர வசதிக்கு செல்போன்ல மெசேஜ் பண்ணியும் பிட்டு அடிச்சிக்கலாம் ஆனா பல கல்லூரிகள்ல அனுமதிக்கரதில்லை :(இப்படியெல்லாம் பிட்டு அடிச்சு எழுத பயமா கஷ்டமா இருந்தா அமைதியா ராவோட ராவா படிச்சிட்டு வந்து எழுதலாம், ஆனாலும் அதுல ஒரு கஷ்டம் நிரைய படிச்சி எழுதினா நேரம் போதறதில்லை. அதனால எல்லாக்கேள்விகளுக்கும் சரியான விடைகளை எழுதும்போது முக்கிய குறிப்புகளையெல்லாம் அடிக்கோடிட்டு எழுதுங்க முடிஞ்சா ஸ்கெட்ச் பென்சில் யூஸ் பண்ணி அடிக்கோடிடலாம்,ரீல் விட்டு எழுதியிருந்தா அடிக்கோடிட வேண்டாம். கொஞ்சமா எழுதினாலும் பாக்க நச்சுன்னு இருக்கரமாதிரி கையெழுத்தும் பாயிண்ட்களும் அழகா எழுதுங்க :)

என் பஸ் (BUZZ) மொக்கை

நேரு சொன்னார் சோம்பேறித்தனம் மிகப்பெரிய எதிரி


காந்தி சொன்னார் உங்கள் எதிரிகளை நேசியுங்கள்’னு

மாமா சொல்ரதை கேக்கனுமா தாத்தா சொல்றதைக்கேக்கனுமா # மிகப்பெரிய டவுட்டு
_________________________________________________________________________
”எல்லாருக்கும் சொர்க்கத்துக்கு போகனும்னு ஆசை ஆனா யாருமே சாகனும்னு ஆசைப்படரதில்லை”


அதே மாதிரி தான்

நமக்கெல்லாம் பாஸாகனும்னு பேராசை ஆனா படிக்க சொன்னா யாரும் கேட்டுக்கரதில்லை :)))
_________________________________________________________________

வாழ்க்கையில பிறந்த நாள், இறப்பு நாள், கல்யாண நாள், இளமை, முதுமை எல்லாமே ஒரு முறை தான் ஆனா இந்த செமஸ்டர் எக்ஸாமை எவண்டா கண்டுபிடிச்சான் ஆறுமாசத்துக்கு ஒரு முறை வச்சு தொலைக்கிறாங்களே!
________________________________________________________________

தினமும் நீச்சல் அடிச்சா வெயிட்டு குறைஞ்சு ஸ்லிம் ஆகிடுவோம்னு சொல்ராங்க ஆனா இந்த திமிங்கலம் வாழ்க்கை பூரா நீச்சல் அடிச்சிட்டே தானே இருக்கு அது மட்டும் ஏன் ஸ்லிம் ஆகவே மாட்டேங்குது?
___________________________________________________________________________

தமிழ்: டேய் நம்ம கணக்கு மாஸ்டருக்கு அறிவே இல்லடா


முத்து: ஏண்டா அப்படி சொல்ரே?

தமிழ்: அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு”னு பேரு வச்சிருக்காரு
____________________________________________________________________

கொசு: அம்மா நான் சினிமாவுக்கு போறேன்

அம்மாகொசு: அங்கே எல்லாரும் கை தட்டுவாங்க, உசாரா இரு

கொசு: இல்லம்மா நான் விஜய் படத்துக்கு தான் போறேன்
______________________________________________________________________________
டீச்சர்: ஏண்டா வீட்டுப்பாடம் எழுதலை


மாணவன்: எங்க வீட்ல கரண்ட் இல்ல சார்

டீச்சர்: மெழுகுவத்தி ஏத்தி படிக்கவேண்டியது தானே

மாணவன்: வத்திபெட்டி சாமி ரூம்ல இருந்தது சார், நேத்து நான் குளிக்காததுனால சாமி ரூம்க்குள்ள போகல சார்

டீச்சர்: ஏன் குளிக்கலை

மாணவன்: தண்ணியில்ல சார் மோட்டார் ஓடலை

டீச்சர்: ஏன் மோட்டர் ஓடலை

மாணவன்: எத்தனை முறை சார் சொல்ரது எங்க வீட்ல கரெண்ட் இல்லைன்னு

என்னோட அட்வைஸ் : மை டியர் ஃப்ரண்ட்ஸ் வீட்டுபாடம் எழுதலைன்னா கவலைபடாதீங்க இதுமாதிரி எதுனா டயலாக் சொல்லி ஏமாத்திடலாம் :))))

டிஸ்கி: நானே இதை காபியடிச்சு தான் எழுதியிருக்கேன் யாராச்சும் இதை காபி பண்ணீங்கன்னா அவங்க நா........ போக!!!