Saturday, November 27, 2010

இந்த உலகம் ஒரு கிழக்கழுதை மாதிரி:

ஒரு கிழவன் தன் வீட்டுல ஒரு கழுதை வளர்த்தாராம். எதிர்பாராம ஒரு நாள் தன் பேரனை கூட்டிக்கிட்டு மகனை பாக்க கிளம்பினாராம். கூடவே கழுதையும் கூட்டிட்டு போனாராம். போற வழியில கழுதை மேல தன் பேரை உட்காரவச்சி கூட்டிட்டு போனாராம்... வழியில போறவங்க சொன்னாங்களாம்



“என்ன தம்பி உங்க தாத்தா வயசானவரா இருக்காரே அவரை கழுதை மேல உட்கார வச்சி நீ நடந்து போகக்கூடாதா’ன்னு.



தாத்தாவும் யோசிச்சு தன் பேரனை நடக்க சொல்லி தான் கழுதை மேல ஏறிக்கிட்டு போய்ட்டு இருந்தாங்களாம்...



கொஞ்ச தூரம் போன பிறகு அங்கிருந்தவங்க சொன்னாங்களாம்

“தாத்தா நீயாச்சும் நடந்து வரலாம், பாவம் சின்னபையன் நடக்க கஷ்டப்படுரானே அவனை கழுதை மேல ஏத்தி கூட்டிட்டு போனா என்ன”ன்னு..



தாத்தாவும் என்னடா இது வம்பா போச்சுன்னு கீழே இறங்கிட்டாராம்...ரெண்டு பேரும் நடந்துட்டே கழுதையும் கூட்டிட்டு போனாங்களாம்...



அங்கிருக்கவங்க சொன்னாங்களாம் ”கழுதையை பொதி சுமக்க தானே வளர்த்தீங்க இப்படி சும்மா கூட்டிட்டு போனா கழுதை உங்க பேச்சை கேக்காது”ன்னு.



தாத்தாவும் பேரனும் ரெண்டு பேருமே கழுதை மேல ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் பயணம் செஞ்சாங்களாம்...

அந்த வழியில போரவங்க சொன்னாங்களாம் “பாவம் அந்த கழுதை மேல ரெண்டு பேரும் ஏறி உட்கார்ந்திருக்கீங்க அந்த கழுதை என்னத்துக்கு ஆகுரது”ன்னு திட்டினாங்களாம்..



இப்படி இந்த உலகம் நாம என்ன செஞ்சாலும் அதுக்கு எதாவது ஒரு குறை சொல்லிட்டே இருக்கும்.. நாம தான் நம்முடைய வழியை சரியா நிர்ணயிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்கனும்...



இப்படி செஞ்சாலும் வீட்டுல இருக்கரவங்க சொல்லுவாங்க ”சொன்ன பேச்சை கேக்குதா பாரு இதெல்லாம் எங்கேயிருந்து உருப்படப்போகுது” ன்னு



ஹ்ம்ம்

No comments:

Post a Comment