நான் வாங்கிய முதல் ஆட்டோகிராப்
உதடுகளால் என் கன்னத்தில் கையெழுத்து போட்ட என் அம்மாவின் அன்பு முத்தம்...
வேண்டும் வரங்கள்:
நினைத்த உடன் மழை, இரவு நேர மெல்லிசை, கள்ளமில்லா சிரிப்பு, பொய்யில்லா நட்பு, மீண்டும் ஒரு பள்ளிப்பருவம், தோள் சாய தோழி, உயிர்கொடுக்கும் தோழன், தாய்மடி தூக்கம், தூக்கத்தில் மரணம், மரணம் வரை உன் நட்பு......
”கல்லில் செதுக்கிய
சிலையை விட கருவறையில்
சுமந்த தாயே
தெய்வம்”
உன்னை காயப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை ஆனால் உன்னை நான் காயப்படுத்தாவிட்டால் எனக்கு வேறு அடைக்கலம் இல்லை
-மரக்கொத்தி
”காதலென்னும்
காற்றில் மட்டும்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள்”
”காதலிகள்
எல்லாம் கண்ணகிகள்
அல்ல சிலைகள்
கட்டுவதற்கு”
”மலரத்துடிக்கும்
மொட்டுக்கு தெரியாது
மலர்ந்தால்
மரணமென்று...”
நட்புக்கவிதை:
வான் கொண்ட நிலவுக்கு மூன்றாம் பிறை அழகு
நான் கொண்ட நட்புக்கு நீ மட்டுமில்லை
உன் நிழல் கூட அழகு தான்
காற்றும் இசையாகும் வாசித்தால்
வார்த்தைகளும் கவிதையாகும் யோசித்தால்
இந்த உலகமே நட்பாகும் நேசித்தால்
அவள் அனைத்தையும்
அழகென்று ரசித்து கொண்டிருந்தாள்
அவள் அழகை
நான் மட்டும்
ரசித்து கொண்டிருந்தென்
அவளுக்கு தெரியாமல்..................
அவள் மட்டுமல்ல
அவள் பேச்சும் தேன் என்று
நான் உணரவில்லை
அவள் பேசும் வரை.....................
aahh...kavithai..kavithai...
ReplyDeletenallaa irukku vani kavithaigal
ReplyDelete”கல்லில் செதுக்கிய
சிலையை விட கருவறையில்
சுமந்த தாயே
தெய்வம்”
romba nallaa irukku marukka mudiyaatha unmai