Monday, March 29, 2010

ஐடியாஸ் & கேள்விஸ்

வீட்டுக்கு கொசு வராம இருக்கனும்னா இரண்டு வழிகள்
  1. கொசுவுக்கு உங்களோட வீட்டு அட்ரஸை தப்பா கொடுக்கனும்
  2. கொசுவரும் போது வீட்ல லைட் ஆஃப் பண்ணிடனும் அப்போ தான் கொசு வீட்ல யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு போய்டும்.

எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு
  1. தண்ணி பாம்புக்கு ஜல்பு புடிக்குமா?
  2. கருப்பா இருக்கர எருமை மாடு எப்படி வெள்ளை கலர்ல பால் கொடுக்குது?
  3. சரக்கு ரெயில் தள்ளாடுமா?
  4. பிராந்திய ஹாட் ட்ரிங்க்ஸ்னு சொல்றாங்களே அதை அப்படியே குடிக்கலாமா இல்லை ஆத்தி குடிக்கனுமா?
  5. குண்டூசி ஒல்லியா தானே இருக்கு அப்ரம் ஏன் அதை குண்டூசின்னு சொல்றோம்?
இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா?
இப்படிக்கு தீவிரமா யோசிச்சு சயிண்ட்டிஸ்ட் ஆக துடிக்கும் இளைஞர் சங்கம்

கடி - 3

நேசித்து பார் கவிதை வரும்
பிரிந்து பார் சோகம் வரும்
நினைத்து பார் அழுகை வரும்
என்னை மறந்து பார் அடிக்கிர
அடியில ஆம்புல்ன்ஸ் வரும்.

முடி வளர்ந்தா வெட்டிக்கலாம்
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம்
ஆனா அறிவு வளர்ந்தா........
கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது

நடிப்புக்கு சிவாஜி
சண்டைக்கு ஜாக்கிஜான்
கிரிக்கெட்டுக்கு சச்சின்
செஸ்சுக்கு விஸ்வநாதன்
அழகுக்கு ஐஸ்வர்யாராய்
டீக்கு பன்னு
டிவிக்கு சன்
வெயிலுக்கு மோரு
நைட்டுக்கு பீரு
இசைக்கு ஏ. ஆர். ரகுமான்
குழந்தைக்கு விளையாட்டு
பாய்ஸ்சுக்கு கேர்ள்ஸ்
பாசத்துக்கு நீ
எஸ்.எம்.எஸுக்கு நான்
ஆனா ஃப்ரண்ட்ஷிப்புக்கு
வேற யாரு நாம தான்!!

காலேஜ் கடிஸ்

ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண 3 வழிகள்
  1. அழிப்பான்(Eraser)
  2. ink remover
  3. whitner
என்ன முழிக்கிர ஃபிகர்னு சொன்னது டயகிராம் நீங்க இன்னும் திருந்தவே இல்லையா!!



என்னோட வலதுகைல பென், இடது கைல செல்போன்
ஒரு காதுல வாத்தியார் படம் நடத்துரத கவனிக்கனும் மறுகாதுல ஃப்ரண்ட்ஸ் பேசரத கேக்கனும்
ஒரு கண் போர்டுல பார்த்து கணக்கு எழுதும், இன்னொரு கண் தூங்கிட்டு இருக்கும்
எவண்டா சொன்னது காலேஜ் லைஃப் ஈஸின்னு

கல்லூரி வாழ்க்கையின் மிகப்பெரிய காமெடிகள்
  1. தயவு செய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க நான் படிக்கனும்
  2. க்ளாஸ் இல்லைன்னா வாங்க லைப்ரரிக்கு போலாம்
  3. சார் எனக்கொரு சந்தேகம்


ஒரு A4 பேப்பரை தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதானால் இனிமேல் அசைன்மெண்ட் எழுதுவதை தவிர்த்து தண்ணீரை பாதுகாப்போம் பொதுநலன் கருதி வெளியிடுவோர் கல்லூரி மாணவர்கள்.

தைரியம் என்றால் என்ன?
ஃப்ரண்ட்ஸோட ஊரைச்சுத்திட்டு நடுராத்திரியில ஃப்ரண்டோட பைக்ல வீட்டுக்கு வரும்போது, அம்மா வாசல்ல நம்மை அடிக்க துடைப்பத்தை வச்சிக்கிட்டு காத்திருக்கும்போது “ என்னம்மா இன்னுமா பெருக்கிட்டு இருக்கே”ன்னு கேப்போமே அதான் தைரியம்.

பேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும் பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் “ NO BALANCE”.

ஒரு பொண்ணு தலைகுனிஞ்சு நடக்க பெற்றோர்கள் என்ன செய்யனும்?
பொண்ணு கைல ஒரு செல்போனும் அதுல மெசேஜ் கார்டும் போட்டு கொடுக்கனும்.

பொதுவா பாய்ஸ் வாட்சை இடது கைல கட்டுராங்க, ஆனா பொண்ணுங்க வலது கைல கட்டுராங்க ஏன் தெரியுமா?
டைம் பாக்கத்தான்

கடி - 2

சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
சிவகாசியில காசை கரியாக்குவாங்க நெய்வேலியில கரியை காசாக்குவாங்க இப்படிக்கு,
யோசனை பண்ணியே வீணாபோன சங்கத்தில் ஒரு சிங்கம்


இன்னைக்கு எங்க சங்கத்துக்கு விடுமுறை, அதானால எஸ்.எம்.எஸ் வரும் ஆனா மேட்டர் வராது
இப்படிக்கு, வேலைக்கு போகாம அடிக்கடி லீவ் எடுப்போர் சங்கம்

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம், உனக்காக மட்டும் இருப்பேன் என்பது காதல், நமக்காக நாம் இருப்போம் என்பது நட்பு, யாருக்காகவும் நான் இல்லை என்பது கொழுப்பு.

செடி வாடினால் தண்ணீர் விடுவேன், நான் வாடினால் கண்ணீர் விடுவேன், நீ வாடினால் என் உயிரை விடுவேன், நீ சந்தோசமா இருக்க அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்

விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல
எக்ஸாம்க்கு பிட்டு கொடுப்பதும் நட்பு தான்

செங்கல்லால் பட்ட அடி உள்ளாரும் ஆறாதே சீக்ரெட்
கேமராவால் பட்ட அடி
இப்படிக்கு நித்தி ஆனந்தா

நான் பெண்களை  நெருப்பாக நினைப்பவன்!! அதானால் தான் ஓடிப்போய் அவர்களை அணைத்துகொள்ள துடிக்கிறேன். எல்லாம் சமூக சேவை தான் இப்படிக்கு, நித்தி ஆனந்தா சுவாமிகள்

சின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும்
சின்ன பிரிவு நம்மை அழவைக்கும்
சின்ன வீடு நம்மை குஜால் படுத்தும்
இப்படிக்கு நித்தி

கவிதை துளிகள்

நான் வாங்கிய முதல் ஆட்டோகிராப்
உதடுகளால் என் கன்னத்தில் கையெழுத்து போட்ட என் அம்மாவின் அன்பு முத்தம்...

வேண்டும் வரங்கள்:
நினைத்த உடன் மழை, இரவு நேர மெல்லிசை, கள்ளமில்லா சிரிப்பு, பொய்யில்லா நட்பு, மீண்டும் ஒரு பள்ளிப்பருவம், தோள் சாய தோழி, உயிர்கொடுக்கும் தோழன், தாய்மடி தூக்கம், தூக்கத்தில் மரணம், மரணம் வரை உன் நட்பு......

கல்லில் செதுக்கிய
சிலையை விட கருவறையில்
சுமந்த தாயே
தெய்வம்

உன்னை காயப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை ஆனால் உன்னை நான் காயப்படுத்தாவிட்டால் எனக்கு வேறு அடைக்கலம் இல்லை
-மரக்கொத்தி

காதலென்னும்
காற்றில் மட்டும்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள்

காதலிகள்
எல்லாம் கண்ணகிகள்
அல்ல சிலைகள்
கட்டுவதற்கு

மலரத்துடிக்கும்
மொட்டுக்கு தெரியாது
மலர்ந்தால்
மரணமென்று...

நட்புக்கவிதை:
வான் கொண்ட நிலவுக்கு மூன்றாம் பிறை அழகு
நான் கொண்ட நட்புக்கு நீ மட்டுமில்லை
உன் நிழல் கூட அழகு தான்

காற்றும் இசையாகும் வாசித்தால்
வார்த்தைகளும் கவிதையாகும் யோசித்தால்
இந்த உலகமே நட்பாகும் நேசித்தால்


அவள் அனைத்தையும்
அழகென்று ரசித்து கொண்டிருந்தாள்
அவள் அழகை
நான் மட்டும்
ரசித்து கொண்டிருந்தென்
அவளுக்கு தெரியாமல்..................


அவள் மட்டுமல்ல
அவள் பேச்சும் தேன் என்று
நான் உணரவில்லை
அவள் பேசும் வரை.....................

சிரிக்கலாம் வாங்க

பெண்: அப்பா நான் சாதிக்க விரும்புறேன்
அப்பா: நல்லது எந்த துறையிலமா?
பெண்: அப்பா நான் விரும்புற பையன் பேரு ‘சாதிக்பா

வாடகையாள: ஹோட்டல் மேனேஜரா, உடனே ரூமுக்கு வாங்க என் மனைவி ஜன்னல் வழியா குதிச்சு தற்கொலை பண்ணிக்கபோரா சார்.
மேனேஜர்: அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?
வாடகையாளர்: யோவ் ஜன்னல் திறக்கமாட்டேங்குதுயா.

பெண்: நீ மட்டும் எனக்கு புருசனா வந்தா கண்டிப்பா காபில விஷத்த போட்டு கொடுத்துருவேன்
ஆண்: கண்டிப்பா நீ மட்டும் பொண்டாட்டியா வந்தா நான் அதை குடிச்சிடுவேன்

கஸ்டமர்: ஏன் இன்னைக்கு எல்லாருக்கும் இலவசமா ஸ்வீட்ஸ் எல்லாம் தரீங்க உங்க ஹோட்டல்ல எதாவது விசேஷமா?
சர்வர்: Annual Clearance sir.

சின்னப்பையனும் இரு விற்பனைப்பெண்ணும்
சின்னபையன்: நான் பெரியவனான நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக்குவீங்களா?
விற்பனைபெண்: சரி பண்ணிக்கிறேன்
சின்னபையன்: அப்படின்னா உங்க வருங்கால கணவருக்காக இலவசமா ஒரு சாக்லேட் தருவீங்களா?

மனைவி: பின்னாடி ஃபிகர் இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான் நீங்க சிரிக்கிரீங்க
கணவன்: உன்னைப்போய் ஃபிகர்ன்னு சொல்றான் அவனுக்கு தான் கண்ணு தெரியல.

கணவன்: நீ தான் எனக்கு மனைவியா வருவேன்னு எங்க வாத்தியாருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: மாடு மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அப்பவே சொன்னார்.

கணவன்: காபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே என்ன போட்டிருக்கே காபில?
மனைவி: ஒரு டீஸ்பூன் டால்மியா சிமெண்ட் போட்டேன் அதான் ஸ்ட்ராங்கா இருக்கு.

டீச்சர்: மேக்ஸ் எக்ஸாம் எழுத சொன்னா ஏண்டா டான்ஸ் ஆடுற?
மாணவன்: ஒவ்வொரு ஸ்டெப்புக்கு மார்க் உண்டுன்னு நீங்க தானே டீச்சர் சொன்னீங்க

வடிவேலு: இந்த நோக்கியா செல்லுல எந்த கார்டு வேணும்னாலும் போட்டு பேசலாம்
பார்த்திபன்: அப்படியா?
வடிவேலு: ஆமா
பார்த்திபன்: அப்படின்னா இந்த ‘ரேஷன் கார்டு “ போட்டு பேசமுடியுமா
எல்.கே.ஜி பாய்:  டீச்சர் என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க
டீச்சர்: ஸ்வீட் பாய்
எல்.கே.ஜி பாய்: மச்சான் சொன்னேன்ல அவ எனக்கு ரூட் விட்ரா டா.

வடிவேலு: என்னோட பேக்கரியில எல்லாவகையான பன்னும் விக்கிறேன் எதுவேணும்னாலும் நீங்க சாப்பிடலாம்
பார்த்திபன்: எல்லாவகையான பன்னும் இருக்கா
வடிவேலு: இருக்கே
பார்த்திபன்: ரிப்பன் ரெண்டுகிலோ கார்பன் ஒரு கிலோ கொடுங்க

நித்தியானந்தாவும்  தாத்தாவும்
தாத்தா:  தமிழ் மொழியை விட சிறந்த மொழி எது?
நித்தியானந்தா: உங்கள் மகள் கனிமொழி தான் அய்யா

எல்.கே.ஜி பாய்1: டேய் மச்சான் எக்ஸாம்க்கு பிட்டு எடுத்துட்டு போனியே என்னாச்சு?
எல்.கே.ஜி பாய்2: அதை ஜட்டிக்குள்ள வைச்சு எடுத்துட்டு வந்தேன். அது தெரியாம உச்சா போய்ட்டேன்டா

கடி

காதல் தோல்வியை விட மிகவும் கஷ்டமான உணர்வு, நண்பன் எக்ஸாம் முடித்து வரும்போது வரும் நினைப்பு “ கொய்யால ஒரு வேளை பாஸாயிடுவானோ!

எக்ஸ்க்யூஸ் மீ ஒரு சின்ன டவுட்:
நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு சொல்றாங்களே, எத்தனை கிலோமீட்டர் நடந்தா நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?


தினம் ஒரு பூ கொடுத்தேன் அவளுக்கு, அவளோ ஒரே பூ தான் கொடுத்தாள் எனக்கு, அது தான் “ஆப்பூ

ஆயிரம் ரோஜா பூக்களை வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு ஊசி நூலையும் எடுத்துக்கொள்ளுங்கள், ரோஜாக்களை ஊசி நூலைக்கொண்டு மாலையாக செய்யுங்கள். மாலை எடுத்துக்கொண்டு கண்ணாடி முன்பு சென்று உங்கள் முகத்தை பாருங்கள், இப்போது நீங்கள் அழகான ”குரங்கு கையில் மாலைஇருப்பதை காணலாம்.


ஒரு நாள் ஒரு பூனை ரொம்ப சோகமா இருந்தது. ஏன்னா அதுக்கு இதுவரைக்கும் எந்த கேர்ள் ஃப்ரண்டும் கிடைக்கவே இல்லை. ஒரு நாள் அழகான பெண்பூனையை பாத்தாதாம். அந்த ஆண் பூனை பெண்கிட்ட போய் ஆசையா பேசினாதாம்
“மியாவ்ன்னு.

பரீட்சை எழுதலாம் வாங்க


எக்ஸாம் எழுதும் போது கொடுக்கப்படும் மூன்று மணி நேரத்தை செலவு செய்வது எப்படி?

எடுத்துக்காட்டாக 10 மணியிலிருந்து 1 மணி வரை எக்ஸாம் என்றால்.

  1. 10.00 - 10.10  ரெஜிஸ்டர் எண் மற்றும் என்ன பாடம், போன்றவற்றை எழுதுங்கள்

  1. 10.10 - 10.20 இந்த நேரத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் கோடுகள் வரையுங்கள்


  1. 10.20 - 10.40 கொடுக்கப்பட்டுள்ள விடைத்தாளில் உள்ள வரைமுறைகளை கவனமாகவும் பொறுமையாகவும் படிங்கள்

  1. 10.40 - 11.20 கேள்வித்தாளில் உள்ள எல்லாக்கேள்விகளையும் ஒருமுறை தெளிவாக படிக்கவும்


  1. 11.20 - 11.40 கேள்வித்தாளில் உள்ள கேள்விகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா, அதை நீங்கள் சரியாக படித்துள்ளீர்களா என மறுமுறை பரிசோதித்து பாருங்கள்

  1. 11.40 - 12.20 எக்ஸாம் ஹாலில் எத்தனை ஃபிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு முறை பார்வையிடுங்கள்


  1. 12.20 - 12.40 எக்ஸாம் ஹாலில் இருக்கும் சூப்பர்வைசரை தண்ணீர் கேட்டு குடியுங்கள்

  1. 12.40 1.00 கடைசி இருபது நிமிடங்களில் எல்லா பக்கங்களிலும் எதாவது எழுதியிருக்கிறோமா என்று சிறிது பார்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்


இப்படியாக மூன்று மணி நேரத்தை சிந்தனையின் துணைகொண்டு எப்படி செலவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

Tuesday, March 16, 2010

எஸ் எம் எஸ் போட்டி:

சாமியார் நித்தியானந்தாவுடன் இருக்கும் நடிகை யார்

அ. மஞ்சிதா

ஆ. ரஞ்சிதா

இ. பஞ்சிதா

உங்கள் பதிலை ’சாமி’ இடம்விட்டு பதிலை டைப் செய்து 58585க்கு எஸ் எம் எஸ் செய்யவும்..

ஜெயிப்பவர்களுக்கு சுவாமியின் லீலைகள் உள்ள 5 சிடி பரிசு

உடனே போனை எடுங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
----------------------------------------------------
ராமசாமி


முனுசாமி

ரங்கசாமி

குப்புசாமி

கருப்புசாமி

அய்யாசாமி

ஆறுசாமி

குட்டிசாமி

மயில்சாமி

கந்தசாமி

இதெல்லாம் டூப்பு



நித்தியானந்தாசாமி தான் டாப்பு!!!

Rajini style in exams dialogue


பாஷா: நான் ஒரு முறை பாடம் படிச்சா எல்லா பாடமும் படிச்ச மாதிரி ஹா ஹா

படையப்பா: அதிகமா படிக்கற பொண்ணும் அதிகமா பிட்டு அடிக்கிர பையனும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல

பாபா: படிச்சது கையளவு படிக்காதது உலகளவு

சிவாஜி: கண்ணா! பன்னிங்க தான் தினமும் படிக்கும் சிங்கம் எக்ஸாம் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி படிக்கும்

எந்திரன்: ஒரு பாடத்தை ஒரு முறை எழுதினா பாஸ்.. ஒவ்வொரு முறையும் எழுதினா அது டைம்பாஸ்

Monday, March 15, 2010

பிட்டுகவிதைகள்


எரிந்து போன சிகரெட் சாம்பல் சொன்னது

இன்று நான்.....

நாளை நீ....


 



எப்பொழுதும் அவள் நான்


தூங்கிய பிறகு தான் வருகிறாள்

அன்று என் கனவில்
இன்று என் கல்லறையில்.....

Dicitionary

இப்பல்லாம் பசங்களை நம்பவே முடியரதில்லை. எல்லாரும் ஏமாத்துபேர்வழிகளாவே இருக்காங்க. அவங்களோட இரட்டை அர்த்த பேச்சுகளை எல்லாம் ஒரு அகராதியாவே வைக்கலாம். அதுல சிலது கீழே இருக்கு பாருங்க

பசங்களோட அகராதி:


1. நான் உன்னை காதலிக்கிறேன் : எத்தன பேர்கிட்ட சொல்லிருப்போம்

2. ஐ மிஸ் யூ : உன்னை பாக்காம இருக்கர சந்தோசமே தனி

3. நீ தான் என்னோட வாழ்க்கை: இன்னொரு பொண்ணு கிடைக்கர வரைக்கும் தான்

4. நீ தான் என் செல்லம் : வேற வழி இல்ல

5. நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கரேன்: வேற யாரும் சிக்கல

பொண்ணுங்க எல்லாரும் உஷாரா இருங்கம்மா..........

தண்ணி தண்ணி....

ABCD எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் நம்ம குடிமகன்கள் மாதிரி யாருக்கும் தெரியாது


A – Aristocrat

B – Bagpiper

C – Colconda

D – Direct special

E – Eight PM

F – Fun drop

G – Golden Eagle

H – Haywards

I – Imperial Blue

J – Jhon exsa

K – Kingfisher

L – Lime Drop

M - Monitor

N – Nepolian

O – Old Monk

P – Peter scotch

Q – Queen

R – Royal Challenge

S – Sand piper



மீதியெல்லாம் எங்கடான்னு கேட்டா சரக்கு அடிச்சிட்டு சொல்றேன்னு சொல்லிருக்காங்க

Thursday, March 11, 2010

எஸ்.எம்.எஸ் துளிகள்

பிணம் போகும் பாதையில் மலர் தூவும் மனிதர்கள்
இரு மனம் போகும் பாதையில் மலர் தூவ மறுப்பதேன்
________________________________________________________
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை
இறக்கும் போது கண்டிப்பாக கொண்டு செல்வேன் பாசமான உங்கள் நினைவுகளை.....
___________________________________________________

கார் ஒட்டத் தெரியனும்னா என்ன பண்ணனும்
கார்ல பெரிய ஓட்டையா போடுங்க அப்பதான்
கார் ஓட்ட நல்லா தெரியும்
நாளைக்கு லாரி ஓட்ட சொல்லித்தரேன்
________________________________________________________
ஹீரோவோட கால்ஷீட்டும்
எக்ஸாம்ல நாம எழுதுர ஆன்சர் ஷீட்டும் ஒன்னு தான்
ரெண்டுமே கதைய நம்பி தான் இருக்கு
அதானால எக்ஸாம் எழுத பயப்பட தேவையில்ல
________________________________________________________
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
பாத்தியா உன்னைய அடிக்காமயே கத்த வச்சிட்டேன் பாத்தியா!!!!!!!!!!!!????
______________________________________________________
 A Train suddenly slips into a crop field and stops the Driver Mr. Bean

Passengers: Are You Blind? How did the train slip into the field?
Bean : A man was standing on the track
Passengers : For one man u endangered so many lives u must have smashed him
Bean : I was trying to do that but he ran into the fields

______________________________________________
நாளைக்கு நாம ரெண்டு பேரும்

எல் ஐ சி பில்டிங் மேல ஏறி நிப்போமா....
நான் 1 2 3 சொன்னதும் நீ முதல்ல குதிப்பியாம்
அப்பரம் நீ 1 2 3 சொன்னதும் நான் குதிப்பேனாம்
_____________________________________________________
விருந்துல முதல்ல ஸ்வீட் ஏன் வைக்கிறாங்க தெரியுமா..........
^
^
^
^
திங்கரதுக்குத்தான்.................
______________________________________________________
பேப்பர் போட்டா பேப்பர்காரன்
பால் போட்டா பால்காரன்
தபால் போட்டா தபால்காரன்
அப்போ
பிச்சை போட்டா????????
______________________________________________________
ஒரு குருவி வேகமா பறந்துவரும் போது தெரியாம கார் மேல மோதி மயங்கி விழுந்துடுச்சு..
அந்த கார் ட்ரைவர் அந்த குருவிய தூக்கிட்டு போய் கூண்டுல போட்டு அதுக்கு தண்ணி கொடுத்தார்
மயக்கம் தெளிஞ்சு அந்த குருவி என்ன சொல்லுச்சு தெரியுமா............
^
^
^
அச்சச்சோ நான் ‘ஜெயில்ல இருக்கேன் ஆக்சிடெண்ட்ல கார்காரன் செத்துட்டானா????????
______________________________________________________
ஐடின்னா எல்லாருக்கும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு தெரியும்
ஆனா இந்த ஹீரோவோட விசிறிகளெல்லாம் “இளைய தளபதின்னு சொல்லுவாங்களாம்
இப்ப தெரியுதா ஐடி ஃபீல்ட் ஏன் டவுன் ஆச்சுன்னு!!!!!!!!
__________________________________________________

Wednesday, March 10, 2010

எஸ் எம் எஸ் துளிகள்

”என்னதான் 300 பக்கம் படிச்சாலும் பரீட்சைல 30 பக்கம் தான் எழுத முடியும்”


- இப்படிக்கு 3 பக்கம் படிச்சு 30 பக்கம் தாண்டி அடிஷ்னல் பேப்பருக்காக கெஞ்சுவோர் சங்கம்

--------------------------------------------------------------------------

நம்முடைய பள்ளிக்கூட வாழ்க்கைல



- நண்பர்களோட கூட்டம்

- ஒரே கலர்ல சீருடை

- சின்னசின்ன சண்டைகள்

- ஆசியர்களின் தோழமை

- எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பிடிச்சுக்கிட்ட குரூப் போட்டோ

- டியூசன் வகுப்புகள்

- முடியாத விளையாட்டு நேரங்கள்

- ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்

- வெட்டியான சண்டைகள்

- ஒரே சோத்துமூட்டைல பத்துபதினஞ்சு கைகள்

- மறக்கமுடியாத மதிப்பெண்கள்

- மன்னிக்கத்தக்க தவறுகள்

- மறக்கமுடியாத சுற்றுலாப்பயணங்கள்

இதெல்லாம் ரொம்ப சுவாரசியமான நிகழ்ச்சிகளா இருந்தது



பள்ளிவாழ்க்கை என்பது சொர்க்கத்தைவிட இனிமையான அனுபவம்



--------------------------------------------------------------------

An aptitude question



/\/\/\/\/\/\/\...............

Who’s signature this???

^

^

^

^

^

ஏழுமலை(7 Hills)

-------------------------------------------------------------------------------------------------------------

நிஜங்களைவிட நினைவுகள்

இனிமையானவை

ஏன் என்றால்

நிஜம் என்பது

சில நிமிடங்கள் மட்டுமே

நினைவுகள் என்றும்

நிரந்தரமானவை!

தன்மீது விழும் ஒவ்வொரு அடியும்

சிற்பம் ஆக்கத்தான் என்று கல்லுக்கு தெரியாது

அதுபோல் ஒவ்வொரு வலியையும்

தாங்கிகொள்ளும் போது

மனிதன் பக்குவமடைகிறான்

--------------------------------------------------------------------------

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும்

தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும்

--------------------------------------------------------------------------
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்

அது மட்டுமே அதிக வட்டியும் உங்களுக்கு திரும்பக்கிடைக்கும்

--------------------------------------------------------------------------
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு........

--------------------------------------------------------------------------

கொசுவை ஒழிப்பது எப்படி?

1. முதலில் உயிரோடு ஒரு கொசுவை பிடிக்க வேண்டும்

2. அதை மெத்தையில மேல படுக்க வைக்கவேண்டும்

3. ரெண்டு ரெக்கையும் ரெண்டு கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்

4. அப்பரம் அதோட வயித்துல கிச்சுகிச்சு மூட்டு

அப்போ கொசு சிரிக்க வாய திறக்கும் அப்போ உடனே அதோட வாயில ஒரு ஸ்பூன் பாய்சனை ஊத்திவிடு....



கொசு செத்துப்போய்டும்





இதையெல்லாம் விட கொசுவை சாகடிக்க இன்னொரு ஈசியான வழி என்னான்னா..................



கொசுவோட காதுல நீ “ஐ லவ் யூ” சொன்னேன்னா அதுவே அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கும்

--------------------------------------------------------------------------

குறை இல்லாத மனிதன் இல்லை

அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை

--------------------------------------------------------------------------

நல்ல நண்பன் உள்ள எவனும் வாழ்க்கையில் தோற்று போக மாட்டான்

-------------------------------------------------------------------------

உன்னை நான் பார்த்தும் இல்லை என்னை நீ பார்த்ததும் இல்லை

பின்பு ஏன் நான் வாழ நீ துடிக்கிறாய் “ இதயமே”

-------------------------------------------------------------------------