Thursday, April 15, 2010

சுட்டது

என் பாதையில்

கடந்து வந்த முற்செடிகள்

காணாமல் போயின

அவளின் ஒரு நொடி

பார்வையில்...



நான்கு திங்களின்

நாலாயிரம்

பேர்களின் கனவுகள்

சிறு பொறியில் கலைக்கப்பட்டது

தேன்கூடு...



தமிழை வளர்க்க

தண்ணீர் ஊற்றிய

தமிழனே இன்று தடைக்கல்லாய்

தங்கிலிஷ்ல்.....



கிறுக்கிக்கொண்டிருக்கும்

கிறுக்கல்களின் நாயகனே

குழந்தை...



தனிமையில் சிந்திக்கும்

தலைகள் சில

தலைவர்கள் சில

தறுதலைகள்



கொடுமையிலும் கொடுமை

தேர்வில் தனிமை



வாழ்க்கை பயணத்தில்

நேர ஓட்டத்தை

கிழித்துச்செல்ல

முற்படுபவனுக்கு மிஞ்சுவது

ஏமாற்றமே....



வினாக்களுக்கு விடைதெரியாமல்

விலக்கு அளிக்கிறேன்

விடைகளுக்கு மட்டும்

கண்டுபிடித்துவிட்டேன்

தவறான விடைகளை....

விடைகளிருந்தும் தெரிந்தே தவறுவது

தவறா தப்பா

விடைகளிருந்தும்

விடை தெரியாமல்....



வினாக்கள் விடைகளோடு

தான் பிறக்கின்றன

விடைகளை தொலைத்துவிட்டு

தேடும் மானிட தேடல்கள்

வினாக்களும் விடைகளும்

அறிந்தவன்

அகில ஆசிரியனே.....



கவிதைதேடும்

கவிஞனில் கண்ணில் பட்டது

கவிதையல்ல

காவியம்



முயற்சியின் பயன்

வெற்றிக்கனியைவிட

இனிமையானது அது

புகழிலும் புணர்ச்சியிலும்

கனிந்து நிற்கும்



உண்மையும் பொய்யாகும்.

பொய்யும் உண்மையாகும்

கலைந்த கனவுகளுக்கு

காலூன்ற கற்றுக்கொடுத்த

கைகளும் கடந்தேறும்

முயற்சிகளின் முட்டுக்கட்டாய்

விளைந்த முற்களும்

காணாமல் போகும்

வாழ்க்கை பயணங்களில்

1 comment:

  1. சுட்டாலும் சுட்டிங்க நல்லா தான் சுட்டுருக்கிங்க..
    கவிதை எல்லாமே நல்லாயிருக்கு...

    ReplyDelete