Monday, April 19, 2010

ஜோக்ஸ்

ஆசிரியர்: ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க தம்பி. கால்குலேட்டர் ஹால்டிக்கெட் கொண்டுவர மறந்துட்டீங்களா?


மாணவன்: இல்ல சார் தெரியாம நாளைக்கு பரீட்சையோட பிட்டை இன்னைக்கு எடுத்துவந்துட்டேன் சார்.



ராமு: என் மனைவி ரொம்ப அப்பாவி

சோமு: எப்படி சொல்றீங்க?

ராமு: அடிச்சா அழனும்னு கூட தெரியலை அவளுக்கு, என்னையே திருப்பி அடிக்கிறா!



மீனா: எஃப். எம்.ல வேலைக்கு போனது தப்பா போச்சு

கீதா: ஏன் என்னாச்சு?

மீனா: கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க!



சிவா: அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான பொண்ணு

பாலா: எப்படி சொல்றே

சிவா: நேத்து அவ வீட்டு குக்கர் விசில் அடிச்சதும் குக்கரை செருப்பால அடிச்சிட்டா!



டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?

நோயாளி: கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்



மனைவி: என்னங்க நம்ம மகன் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தனாம்

கணவர்: இல்லையே நான் அவளோட அம்மாகிட்ட தானே கொடுக்க சொன்னேன்



ஆசிரியர்: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவன்: மணலுக்கு சொறிஞ்சு விட்டு நைசில் பவுடர் போட்டு விடனும் சார்



நடத்துனர்: டிக்கட் எடு

சிவா: முன்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: யாரும் எடுக்கலை

சிவா: அப்போ பின்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: பின்னாடியும் யாரும் எடுக்கலை

சிவா: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா?



அமெரிக்கன்: எங்க ஊர்ல டால்பின்ஸ் பேசும்

ஜப்பான்காரன்: எங்க ஊர்ல ரோபோட்ஸ் எல்லாம் பாடும்

இந்தியன்: எங்க ஊர்ல குரங்கு படிக்கும் பாருங்க சிரிக்குது



போலிஸ்: உனக்கு நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்கு தண்டனை

கைதி: ஹா ஹா ஹா

போலிஸ்: ஏண்டா சிரிக்கிற

கைதி: ஹையோ ஹையோ... நான் எந்திரிக்கிரதே 8 மணிக்கு தான்



அஜய்: என்னோட டான்ஸ் ஆட வரியா

ஸ்டார்: நான் சுவாமிஜியோட மட்டும் தான் ஆடுவேன் சாக்கடையோட இல்லை



அம்மா: ஏண்டா முடி வெட்டலை

பையன்: இது அந்நியன் ஸ்டைல்

அம்மா: ஏண்டா மீசை எடுத்துட்டே

பையன்: இது கஜினி சூர்யா ஸ்டைல்

அம்மா: ஏண்டா ஏழு நாளா குளிக்கலை

பையன்: இது வேட்டைக்காரன் ஸ்டைல்

3 comments:

  1. நடத்துனர்: டிக்கட் எடு

    சிவா: முன்னாடி எடுப்பாங்க

    நடத்துனர்: யாரும் எடுக்கலை

    சிவா: அப்போ பின்னாடி எடுப்பாங்க

    நடத்துனர்: பின்னாடியும் யாரும் எடுக்கலை

    சிவா: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா?

    amaa amaa hahaha

    ReplyDelete
  2. டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?

    நோயாளி: கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

    டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

    நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்
    paavam gopal ennai maathiri polarukku

    ReplyDelete