“CO2 Research & Green Technology Centre”
கரியமில வாயு ஆராய்ச்சி மற்றும் பசுமை தொழில்நுட்ப மையம்
புவி வளிமண்டலத்தில் உள்ள பசுமைநிற வாயுக்களில் முக்கியமானதுமான அதிகப்படியானதுமான(9-26%) வாயு கார்பன் டைஆக்சைடு வாயுவாகும். ஒரு லட்சம் பசுமைநிற வாயுக்கூறுகளில் 5% மனிதர்களிடமிருந்து உமிழப்படுகிறது. மொத்த வளிமண்டல வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடு சுமார் 385 மூலக்கூறுகள் உள்ளன. இதில் 19.25 சதவிகிதம் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உலக அளவில் முன்ணனியாக உள்ள பத்து நாடுகளில் இருந்து வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு 67.2%. அதிகப்படியான கரியமில வெளிப்பாடுகளால் இன்றைய இயற்கை உலகவெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகிலுள்ள பனிக்கட்டிகள் விரைவில் உருகி நிலப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. கரியமில வாயுவின் அதிகப்படியான வெளிப்பாடுகளை கட்டுபடுத்த பலநூறு கோடிகளில் மரம் வளர்த்தாலும் இன்றைய கால மாற்றங்களின் சூழ்நிலையை மாற்ற மரங்கள் மட்டும் போதுமானவையாக இருக்கமுடியாது.
எனினும் நவீன உலகில் பல வசதிகளை தடுத்தப்பதற்கில்லை. உதாரணமாக வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரியமில வாயுக்கள். வாகன்ங்கள் இன்றைய உலகில் அத்தியாவசியமாகிவிட்டது. இவைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்களை தடுக்கமுடிவதில்லை. கரியமில வாயுவினை கட்டுப்படுத்த உலக முன்ணனி நாடுகள் பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. இதற்காக பல கோடிகளையும் செலவிட முன்வந்துள்ளது. இதையொட்டி பலநாடுகளில் கரியமில வாயுவினைக்கொண்டு செயல்படும் பொருட்களையும் இயந்திரங்களையும் தயாரிக்கும் பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
பூமியில் வாழும் ஒவ்வொருவரும் புவியின் வாழ்நாளைக்காக்கவும் கரியமில வாயுவின் தாக்கத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளவும் சில வழிகளை மேற்கொள்ளலாம்
1. இயற்கை சூழலை பாதுகாக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும்
2. அதிகமான புகை வெளியிடும் வாகன்ங்களை பயன்படுத்தவேண்டாம்
3. குறைந்த தூரங்களில் உள்ள அலுவலகமோ, அங்காடிகளுக்கோ செல்ல நேர்ந்தால் உடற்பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் மிதிவண்டிகளை பயணங்களுக்காக பயன்படுத்தலாம்
4. துணிகளையும், வாகன டயர்களையும், நெகிழ்வுப்பை (பிளாஸ்டிக்)களையும், பொருட்களையும் எரிக்கவேண்டாம்.
5. கரியமில வாயுவினை நல்வழியில் பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்கலாம்.
6. தொழிற்சாலைகளில் புகைப்போக்கிகள் வெளியிடும் புகையினை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேம்பட வேண்டும்.
7. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் மின்சாரத்தினை பயன்படுத்தி வீணடிக்கவேண்டாம்.
8. வீணான பொருட்களைக்கொண்டு புதுப்பிக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
9. பொதுமக்கள் தங்களுடைய சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்கவேண்டும்.
10. கரியமில வாயுவின் உலகவெப்பமயமாதல் போக்கினை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படச்செய்ய வேண்டும்.
இந்த முயற்சியின் விளைவாக தென்னிந்தியாவில் ”கரியமில வாயு ஆராய்ச்சி மற்றும் பசுமைநிற தொழில்நுட்ப மையம்” உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கரியமில வாயுவினைக்கொண்டு பல பணித்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. கடந்த 15.02.10 அன்று மத்திய அமைச்சர் டாக்டர். ஃபாருக் அப்துல்லா, புதிய மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறை அமைச்சர், வேலூரில் “கரியமில ஆராய்ச்சி மற்றும் பசுமை தொழில்நுட்ப மைய”த்தை திறந்து வைத்து பேசினார்.
இம்மையத்தில் கரியமில வாயு மற்றும் திடக்கழிவின் மூலம் மின்சாரம், குறைந்த காற்றழுத்த்தின் மூலம் இயங்கும் காற்றாலை, திடநிலை ஆக்சைடு எரிமக்கலன், சாண எரிவாயுவிலிருந்து மின்சாரம் உற்பத்தி போன்ற பல பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
”கரியாக்கும் கரியமில வாயுவினை கருத்தோடு பயன்படுத்துவோம்”
nice
ReplyDeletekandippaga
ReplyDeletenandri annam
ReplyDeletenalla pathivu eppadi
ReplyDeleteippadi oru pathivu podanum nu
thonuchu?