Tuesday, February 23, 2010

நேர நிர்வாகம்

எங்களுடைய நிறுவனத்தின் சார்பில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் நேரம் பற்றிய மேலாணமை வகுப்பு எடுக்கப்பட்டது. மனிதவள டிபார்ட்மெண்ட்டிலிருந்து எங்களை நேரம் குறித்த விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதில் மனித வள மேம்பாட்டுத்துறையில் ஒருவரை பயிற்சியாளராக ஏற்பாடு செய்திருந்தனர்.


சென்னையிலிருந்து வந்திருந்த அவர் எங்களுக்கு நல்லமுறையில் நேரம் பற்றிய செய்திகளை அளித்தார். முதலில் SWOTபற்றிய விரிவாக்கம் அளித்தார். S – Strength W- Weakness   O- Oppourtunity T-Threats   போன்ற விளக்கங்களை அளித்து, ஒவ்வொருவருடைய பலங்களையும் பலவீனங்களைப் பற்றியும் கேட்டறிந்து அவற்றையெல்லாம் எப்படி கையாளுவது என்பதைப்பற்றியும் கூறினார். இதில் நிறைய பேர் தங்களுக்கு அதிகமாக கோபம் வரும், அமைதியாக இருப்பேன் என்றெல்லாம் கூறினார்கள். இதில் ஒருவர் மட்டும் தன்னுடைய பலவீனம் என்னவென்றே தெரியாது இது தான் என்னுடைய பலவீனம் என்று கூறினார், மற்றும் பலர் மிகசுவாரசியமான பழக்கவழக்கங்களையும் பலவீன்ங்களையும் கூறினர். இதனால் அந்த அறையில் கலகலப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு அனைவரும் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் செலுத்த தொடங்கினர். பின்னர் அனைவரும் 11 பேர் அடங்கிய குழுக்களாக பிரித்து ஒவ்வொருவருக்கும் நேரத்தை பற்றிய தலைப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்பை அளித்து அதில் அந்தந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் பங்குகொள்ளசெய்தார். இதன்படியே அனைத்து குழுவிலும் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி தெளிவான கருத்துகளை கூறி அக்கருத்துக்களை ஒரு தாளில் எழுதி அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைத்தனர். இதற்காக அவர் கொடுத்த நேரம் மொத்தமாக பத்து நிமிடங்கள் ( கலந்துரையாடல் ஐந்து நிமிடங்கள் + அனைவருக்கும் விளக்கமளித்தது ஐந்து நிமிடங்கள்).

மூன்றாவதாக அவர் அனைவருக்கும் ஒரே மாதிரியான போட்டியை அறிவித்தார். அது என்னவெனில் ஒரு நாளைக்கு 1440 ரூபாய் கொடுக்கப்படும், அதை நம்ம அருணாசலம் படத்தில் செலவழிப்பாரே அது போல் செலவழிக்கவேண்டுமாம், இந்த 1440 ரூபாய் வைத்து ரஜினி மாதிரி அரசியலா நடத்தமுடியும். ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லச்சொன்னார். இப்படி சொன்னதும் அனைவரும் தங்களுக்கு தோன்றிய முறையில் செலவுகளை சொல்லத்தொடங்கினர்.

ஒருவர் சாப்பிட, ட்ரிங்க்ஸ் குடிக்க, துணிமணிகள் வாங்க, நன்றாக தூங்க செலவு செய்வேன் என்றார்.

முதல் மூன்றும் சரியானவையாக இருந்தன ஆன கடைசியாக என்ன சார் தூங்கரதுக்கு எதுக்கு சார் காசு செலவு பண்ணனும்என்று கேட்டார் பயிற்சியாளர்.

இல்ல சார் நாங்க லாட்ஜ்ல ரூம் போட்டு தூங்குவேன் சார், வீட்ல நிம்மதியா தூங்க முடியாது சார்என்றதும் அந்த கான்ஃப்ரன்ஸ் ஹால் முழுதும் பயங்கர சிரிப்பொலி எழும்பியது.

அடுத்து ஒருவர் எழுந்து “ டிபன் சாப்பிட, காபி டீ குடிக்க, சினிமா பார்க்க ஸ்னேக்ஸ் சாப்பிட என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டி கடைசியாக,

 தானமாக பத்து ரூபாய் கொடுப்பேன்என்றதும் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். ஏனெனில் அவர் ஏற்கனவே தானம் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையை சொல்லியிருந்தார்.

பெண்மணி ஒருவர் எழுந்து தன் கருத்தை கூறினார் “ காய்கறிகள் வாங்குவேன், என் வீட்டுக்காரர் வண்டிக்கு பெட்ரோல் வாங்க் கொடுப்பேன், மேக்கப் பொருட்கள் வாங்குவேன், கடைசியாக அழகான புடவை வாங்குவேன்என்றதும்,

குழுவில் இருந்த ஒருவர் எழுந்து “ ஏம்மா எல்லாக்காசும் புடவை வாங்குவதற்கே சரியாப்போய்டுமே, வீட்டுக்கு எதுவும் பண்ணமுடியாதேஎன்றார் இப்படி அவர் கூறியதும் அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

அடுத்து இன்னொருவர் எழுந்து “ சார் என் மனைவிக்கு ஒரு ஜாக்கெட் வாங்கித்தருவேன் சார்என்றார்

பயிற்சியாளர் “என்ன சார் ஒரு ஜாக்கெட் வாங்க 1440 ரூபாயா? என்று வாயைப் பிளந்தார்

அதற்கு அவர் கூறியதுஇல்ல சார் இப்பல்லாம் இந்த ஜெயாடிவியில குஷ்பு விதவிதமா ஜாக்கெட் போட்டுட்டு வராங்க அதே மாதிரி என் மனைவிக்கு வேணுமாம்என்றார்

இதற்கு பலத்த சத்தமாக சிரிப்பொலி எழுந்தது.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றிய கருத்துகளை நகைச்சுவையாகயும் கலகலப்பாகவும் எடுத்துகூறினர்

பிறகு கடைசியில் பயிற்சியாளர் அதற்கு தகுந்த விளக்கமளித்தார். நான் கூறிய 1440 என்பது ஒரு நாளின் மொத்த நிமிடங்களின் எண்ணிக்கை (60 x  24). ஒரு நாளில் நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பொன்னைவிடவும் முக்கியமானது. நாம் அதனை சரியான விதத்திலும் சீரான முறையிலும் மதிப்புமிக்கதாக பயன்படுத்தவேண்டும். நேரத்தினை பணத்தை போல் வீணாக விரையமாக்காமல் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீண்ட விளக்கம் கூறினார்.                                         

இப்போது நேரமின்மையால் இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்

No comments:

Post a Comment