அறியாமையின் ஆணிவேருக்கு
சூரியன்கூட தெரிவதில்லை
கண்மூடி தவம்கிடக்கு ஆந்தைக்கு
காண்பதெல்லாம் தன் இரையாக மட்டுமே
தீர்க்கமான அறிவின் கண் திறந்து
மூடக்கண்களை
மூடிக்கொண்டே இரு
ஆதவன்கரங்களில் செத்தொழிந்து
போகும் இரவின் கீற்றுகளும்
மாயப் பொய்களும்.
Friday, February 26, 2010
Wednesday, February 24, 2010
செத்து செத்து விளையாடலாம் வாங்க.....
நம்ம ஊர்ல புது கேம் ஒன்னு அறிமுகப்படுத்தியிருக்காங்களே என்ன்ன்னு பாக்கலாம்னு போனா.....................
முதல் பரிசு : 50 லட்சம் (தலா 5 பேருக்கு) இரண்டாம் பரிசு : கார் (தலா 2 பேருக்கு) இடம் : சேப்பாக்கம் க்ரவுண்ட் தகுதி : திடகாத்திரமான இதயம் விளையாட்டு : இளையதளபதி நடிச்ச 20 படம் பாக்கனுமாம் ஹையோ இதுக்கே பயம்மா இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டா இன்னும் விளையாட்டோட விதிமுறைகள்னு சொல்லிருக்காங்க அது என்ன்ன்னு சாகப்போற நேரத்துல தெரிஞ்சுக்கர ரசிகர்களுக்காக சொல்றேன் விதிமுறைகள்: 1. வாந்தி எடுக்க்கூடாது 2. அவன் என்ன பண்ணாலும் திட்டாம படம் பாக்கனும் 3. மயக்கம் போட்டு விழக்கூடாது 4. சரியில்லை நம்பமுடியலை நடக்காது ஓடாது பறக்காதுனெல்லாம் பேச்சுக்கு பேச்சு திட்டிட்டு இருக்க்கூடாது 5. கடைசியா முக்கியமான விசயம் படம் முடியர வரைக்கும் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு சாகாம இருக்கனும். இதுக்கெல்லாம் ரெடின்னா மட்டும் விளையாட்டுல கலந்துக்கோங்க விளையாட்டுல கலந்துக்க தானே கூடாது அட்லீஸ் பார்வையாளரா பாக்கலாமேன்னு மட்டும் அங்கே வந்துடாதீங்க, எங்க தல காதுல கூட ரத்தம் வரைவைக்கும் அவ்ளோ பவர் ஃபுல்!!!!!!!!!!! |
Tuesday, February 23, 2010
மொக்கைக் கவிதை
தத்தி தத்தி தாவிவரும்
பிஞ்சுக் குழந்தையை போல
சிக்கி சிக்கி பிரியும் கயிற்றைபோல
பின்னி பிணைந்து வரும்
அருவிகளினை போல
தமிழெழுத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும்
கோர்த்து கோர்த்து வரைகிறேன்
தமிழ்க்கவிதையை!!!!!
செல்ல(தங்கை) வில்லி: அடியேய் வாணி ஏண்டி இப்படி சாகடிக்கிறே வீட்ல தான் உன் தொல்லை தாங்கலைன்னா இங்கேயுமா...
திருமண நாள் வாழ்த்துக்கள்
இன்று ஏழாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் என் பள்ளித்தோழிஅன்பு கவிதா & ரமேஷ் தம்பதியினருக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள். இன்று போல என்றும் வாழ்வில் எல்லாவளமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ உளமார வாழ்த்துகிறேன்
நேர நிர்வாகம்
எங்களுடைய நிறுவனத்தின் சார்பில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் நேரம் பற்றிய மேலாணமை வகுப்பு எடுக்கப்பட்டது. மனிதவள டிபார்ட்மெண்ட்டிலிருந்து எங்களை நேரம் குறித்த விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதில் மனித வள மேம்பாட்டுத்துறையில் ஒருவரை பயிற்சியாளராக ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையிலிருந்து வந்திருந்த அவர் எங்களுக்கு நல்லமுறையில் நேரம் பற்றிய செய்திகளை அளித்தார். முதலில் ”SWOT’ பற்றிய விரிவாக்கம் அளித்தார். S – Strength W- Weakness O- Oppourtunity T-Threats போன்ற விளக்கங்களை அளித்து, ஒவ்வொருவருடைய பலங்களையும் பலவீனங்களைப் பற்றியும் கேட்டறிந்து அவற்றையெல்லாம் எப்படி கையாளுவது என்பதைப்பற்றியும் கூறினார். இதில் நிறைய பேர் தங்களுக்கு அதிகமாக கோபம் வரும், அமைதியாக இருப்பேன் என்றெல்லாம் கூறினார்கள். இதில் ஒருவர் மட்டும் தன்னுடைய பலவீனம் என்னவென்றே தெரியாது இது தான் என்னுடைய பலவீனம் என்று கூறினார், மற்றும் பலர் மிகசுவாரசியமான பழக்கவழக்கங்களையும் பலவீன்ங்களையும் கூறினர். இதனால் அந்த அறையில் கலகலப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு அனைவரும் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் செலுத்த தொடங்கினர். பின்னர் அனைவரும் 11 பேர் அடங்கிய குழுக்களாக பிரித்து ஒவ்வொருவருக்கும் நேரத்தை பற்றிய தலைப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்பை அளித்து அதில் அந்தந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் பங்குகொள்ளசெய்தார். இதன்படியே அனைத்து குழுவிலும் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி தெளிவான கருத்துகளை கூறி அக்கருத்துக்களை ஒரு தாளில் எழுதி அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைத்தனர். இதற்காக அவர் கொடுத்த நேரம் மொத்தமாக பத்து நிமிடங்கள் ( கலந்துரையாடல் ஐந்து நிமிடங்கள் + அனைவருக்கும் விளக்கமளித்தது ஐந்து நிமிடங்கள்).
மூன்றாவதாக அவர் அனைவருக்கும் ஒரே மாதிரியான போட்டியை அறிவித்தார். அது என்னவெனில் ஒரு நாளைக்கு 1440 ரூபாய் கொடுக்கப்படும், அதை நம்ம அருணாசலம் படத்தில் செலவழிப்பாரே அது போல் செலவழிக்கவேண்டுமாம், இந்த 1440 ரூபாய் வைத்து ரஜினி மாதிரி அரசியலா நடத்தமுடியும். ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லச்சொன்னார். இப்படி சொன்னதும் அனைவரும் தங்களுக்கு தோன்றிய முறையில் செலவுகளை சொல்லத்தொடங்கினர்.
ஒருவர் ”சாப்பிட, ட்ரிங்க்ஸ் குடிக்க, துணிமணிகள் வாங்க, நன்றாக தூங்க செலவு செய்வேன்” என்றார்.
முதல் மூன்றும் சரியானவையாக இருந்தன ஆன கடைசியாக ”என்ன சார் தூங்கரதுக்கு எதுக்கு சார் காசு செலவு பண்ணனும்” என்று கேட்டார் பயிற்சியாளர்.
”இல்ல சார் நாங்க லாட்ஜ்ல ரூம் போட்டு தூங்குவேன் சார், வீட்ல நிம்மதியா தூங்க முடியாது சார்” என்றதும் அந்த கான்ஃப்ரன்ஸ் ஹால் முழுதும் பயங்கர சிரிப்பொலி எழும்பியது.
அடுத்து ஒருவர் எழுந்து “ டிபன் சாப்பிட, காபி டீ குடிக்க, சினிமா பார்க்க ஸ்னேக்ஸ் சாப்பிட” என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டி கடைசியாக,
”தானமாக பத்து ரூபாய் கொடுப்பேன்” என்றதும் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். ஏனெனில் அவர் ஏற்கனவே தானம் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையை சொல்லியிருந்தார்.
பெண்மணி ஒருவர் எழுந்து தன் கருத்தை கூறினார் “ காய்கறிகள் வாங்குவேன், என் வீட்டுக்காரர் வண்டிக்கு பெட்ரோல் வாங்க் கொடுப்பேன், மேக்கப் பொருட்கள் வாங்குவேன், கடைசியாக அழகான புடவை வாங்குவேன்” என்றதும்,
குழுவில் இருந்த ஒருவர் எழுந்து “ ஏம்மா எல்லாக்காசும் புடவை வாங்குவதற்கே சரியாப்போய்டுமே, வீட்டுக்கு எதுவும் பண்ணமுடியாதே” என்றார் இப்படி அவர் கூறியதும் அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.
அடுத்து இன்னொருவர் எழுந்து “ சார் என் மனைவிக்கு ஒரு ஜாக்கெட் வாங்கித்தருவேன் சார்” என்றார்
பயிற்சியாளர் “என்ன சார் ஒரு ஜாக்கெட் வாங்க 1440 ரூபாயா? என்று வாயைப் பிளந்தார்
அதற்கு அவர் கூறியது “ இல்ல சார் இப்பல்லாம் இந்த ஜெயாடிவியில குஷ்பு விதவிதமா ஜாக்கெட் போட்டுட்டு வராங்க அதே மாதிரி என் மனைவிக்கு வேணுமாம்” என்றார்
இதற்கு பலத்த சத்தமாக சிரிப்பொலி எழுந்தது.
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றிய கருத்துகளை நகைச்சுவையாகயும் கலகலப்பாகவும் எடுத்துகூறினர்
பிறகு கடைசியில் பயிற்சியாளர் அதற்கு தகுந்த விளக்கமளித்தார். நான் கூறிய 1440 என்பது ஒரு நாளின் மொத்த நிமிடங்களின் எண்ணிக்கை (60 x 24). ஒரு நாளில் நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பொன்னைவிடவும் முக்கியமானது. நாம் அதனை சரியான விதத்திலும் சீரான முறையிலும் மதிப்புமிக்கதாக பயன்படுத்தவேண்டும். நேரத்தினை பணத்தை போல் வீணாக விரையமாக்காமல் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீண்ட விளக்கம் கூறினார்.
இப்போது நேரமின்மையால் இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்
Thursday, February 18, 2010
“CO2 Research & Green Technology Centre”
“CO2 Research & Green Technology Centre”
கரியமில வாயு ஆராய்ச்சி மற்றும் பசுமை தொழில்நுட்ப மையம்
புவி வளிமண்டலத்தில் உள்ள பசுமைநிற வாயுக்களில் முக்கியமானதுமான அதிகப்படியானதுமான(9-26%) வாயு கார்பன் டைஆக்சைடு வாயுவாகும். ஒரு லட்சம் பசுமைநிற வாயுக்கூறுகளில் 5% மனிதர்களிடமிருந்து உமிழப்படுகிறது. மொத்த வளிமண்டல வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடு சுமார் 385 மூலக்கூறுகள் உள்ளன. இதில் 19.25 சதவிகிதம் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உலக அளவில் முன்ணனியாக உள்ள பத்து நாடுகளில் இருந்து வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு 67.2%. அதிகப்படியான கரியமில வெளிப்பாடுகளால் இன்றைய இயற்கை உலகவெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகிலுள்ள பனிக்கட்டிகள் விரைவில் உருகி நிலப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. கரியமில வாயுவின் அதிகப்படியான வெளிப்பாடுகளை கட்டுபடுத்த பலநூறு கோடிகளில் மரம் வளர்த்தாலும் இன்றைய கால மாற்றங்களின் சூழ்நிலையை மாற்ற மரங்கள் மட்டும் போதுமானவையாக இருக்கமுடியாது.
எனினும் நவீன உலகில் பல வசதிகளை தடுத்தப்பதற்கில்லை. உதாரணமாக வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரியமில வாயுக்கள். வாகன்ங்கள் இன்றைய உலகில் அத்தியாவசியமாகிவிட்டது. இவைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்களை தடுக்கமுடிவதில்லை. கரியமில வாயுவினை கட்டுப்படுத்த உலக முன்ணனி நாடுகள் பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. இதற்காக பல கோடிகளையும் செலவிட முன்வந்துள்ளது. இதையொட்டி பலநாடுகளில் கரியமில வாயுவினைக்கொண்டு செயல்படும் பொருட்களையும் இயந்திரங்களையும் தயாரிக்கும் பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
பூமியில் வாழும் ஒவ்வொருவரும் புவியின் வாழ்நாளைக்காக்கவும் கரியமில வாயுவின் தாக்கத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளவும் சில வழிகளை மேற்கொள்ளலாம்
1. இயற்கை சூழலை பாதுகாக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும்
2. அதிகமான புகை வெளியிடும் வாகன்ங்களை பயன்படுத்தவேண்டாம்
3. குறைந்த தூரங்களில் உள்ள அலுவலகமோ, அங்காடிகளுக்கோ செல்ல நேர்ந்தால் உடற்பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் மிதிவண்டிகளை பயணங்களுக்காக பயன்படுத்தலாம்
4. துணிகளையும், வாகன டயர்களையும், நெகிழ்வுப்பை (பிளாஸ்டிக்)களையும், பொருட்களையும் எரிக்கவேண்டாம்.
5. கரியமில வாயுவினை நல்வழியில் பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்கலாம்.
6. தொழிற்சாலைகளில் புகைப்போக்கிகள் வெளியிடும் புகையினை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேம்பட வேண்டும்.
7. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் மின்சாரத்தினை பயன்படுத்தி வீணடிக்கவேண்டாம்.
8. வீணான பொருட்களைக்கொண்டு புதுப்பிக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
9. பொதுமக்கள் தங்களுடைய சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்கவேண்டும்.
10. கரியமில வாயுவின் உலகவெப்பமயமாதல் போக்கினை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படச்செய்ய வேண்டும்.
இந்த முயற்சியின் விளைவாக தென்னிந்தியாவில் ”கரியமில வாயு ஆராய்ச்சி மற்றும் பசுமைநிற தொழில்நுட்ப மையம்” உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கரியமில வாயுவினைக்கொண்டு பல பணித்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. கடந்த 15.02.10 அன்று மத்திய அமைச்சர் டாக்டர். ஃபாருக் அப்துல்லா, புதிய மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறை அமைச்சர், வேலூரில் “கரியமில ஆராய்ச்சி மற்றும் பசுமை தொழில்நுட்ப மைய”த்தை திறந்து வைத்து பேசினார்.
இம்மையத்தில் கரியமில வாயு மற்றும் திடக்கழிவின் மூலம் மின்சாரம், குறைந்த காற்றழுத்த்தின் மூலம் இயங்கும் காற்றாலை, திடநிலை ஆக்சைடு எரிமக்கலன், சாண எரிவாயுவிலிருந்து மின்சாரம் உற்பத்தி போன்ற பல பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
”கரியாக்கும் கரியமில வாயுவினை கருத்தோடு பயன்படுத்துவோம்”
Wednesday, February 17, 2010
இரண்டு வரி விளம்பரம்
ஆசிரியர் தேவை
சிந்திக்க தெரியாத 'அடி'முட்டாளுக்கு சிந்தனை தரும் செய்திகளை அளிக்க ஆதியும் அந்தமும் அடங்கிய புத்தகத்துடன் சிந்தனை அறிவும் போதிக்ககூடிய அறிவாளி ஆசிரியர் தேவை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி adimuttal@advt.in
ஐடியாக்கள் தேவை
Tuesday, February 9, 2010
என் உயிர்தோழி செல்விக்காக..............
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகளிங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததே ஒ ....
சின்மயீ ஆலாபனா....
ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்துண்டா ?
என்னை நீயும் தான் பார்த்து கொள்வாய்
கன்னி வீசும் வானவில்லை கண்டதுண்டா ?
என்னை வந்து நீ கட்டி கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய்
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ அல்லவோ சிலுப்புகிறாய்
ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்
துறை முகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுன்மை
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே
உன் இடம் தேடியே வந்ததென்ன
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
நம்முள்ளே நடப்பது என்ன என்ன ?
என்ன என்ன..........
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகளிங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததே ஒ ....
சின்மயீ ஆலாபனா....
ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்துண்டா ?
என்னை நீயும் தான் பார்த்து கொள்வாய்
கன்னி வீசும் வானவில்லை கண்டதுண்டா ?
என்னை வந்து நீ கட்டி கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய்
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ அல்லவோ சிலுப்புகிறாய்
ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்
துறை முகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுன்மை
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே
உன் இடம் தேடியே வந்ததென்ன
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
நம்முள்ளே நடப்பது என்ன என்ன ?
என்ன என்ன..........
Subscribe to:
Posts (Atom)