முதலில் இப்பொன்னான புத்தகத்தை எழுதி எங்களுக்கு அளித்த திரு. விழியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே ஆகிய இரு கதைகளும் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்க்கூடியவை. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்நூல் மிகவும் அருமையாக இருந்த்து. நாம் இந்த நூலை படிக்கும்போது சிறுவயது குழந்தைகளாக மாறிவிடுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தைகளின் தெளிவான பேச்சு, வழக்கமான நகைச்சுவைகள், அறிவார்ந்த செயலாற்றல்கள், அவர்களுடைய வாழ்வியல் அனுபவங்கள் அனைத்தும் இக்கதையின் ஆசிரியர் அழகிய நயத்துடன் எழுதியுள்ளார்.
முதலில் காலப்பயணிகள் என்ற கதை என்னை மிகவும் கவர்ந்த்து. நான்கு மாணவர்களின் படிப்புத்திறன்,விளையாட்டு, அவர்களுடைய சுறுசுறுப்பு, எதையும் அறிந்து கொள்ளும் ஆவல் இப்படி குழந்தைகளுக்கே உரிய பண்புகளை அழகாக கதையுடன் இழைத்திருந்தார். நான்கு மாணவர்களிடம் கிடைத்த மந்திர புத்தகமும் அதன் மூலம் அவர்கள் பயணித்த பல்வேறு காலங்களை அழகாக விவரித்திருந்தார். அந்த மந்திரப்புத்தகத்தின் பற்றி வாசிக்கும்போதே படிப்பவர்களுக்கும் ஒரு அழகான இட்த்திற்கு செல்லபோகிறோம் என்கிர சுவாரசியம் அக்குழந்தைகளோடு நமக்கும் ஒட்டிக்கொள்வது எழுத்தாளரின் எழுத்து திறமை எனலாம். அந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிரையும் அதற்கான விடையையும் அறிந்து கொள்ள ஓவ்வொரு காலத்தையும் அதற்குரிய வளமையும் எடுத்துரைத்த விதம் மிகவும் அருமை. விடையை கண்டுபிடிக்க மாணவர்கள் தங்கள் திறமையையும் அதன் மூலம் அவர்களோடு நாமும் பெறுகிர அனுபவம்
வளமான வாழ்க்கைக்கு நேரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கினை மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்கிற பாங்கு மிகவும் அருமையாக இப்புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் பல்வேறு காலங்களுக்கு சென்று நேரடியான அனுபவத்தை பெறுவது போன்ற கதையமைப்பு படிப்பவர்களையும் அந்த காலத்திற்கு சென்று அனுபவம் பெற்றது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது மிகவும் அருமை. மாணவர்கள் மந்திரப்புத்தகத்தின் மூலம் புராண காலத்திற்கு சென்று தக்க நேரத்தில் சரியான உதவியை செய்யவேண்டுமென்ற கருத்தை அழகாக எழுதியிருந்தார். அடுத்து விடுதலை போராட்ட காலத்திற்கு சென்று நம்முடைய பண்பாடு கலாச்சாரம் வீரம் விருந்தோம்பல் கொடை ஆகிய அனைத்தையும் அறிந்து கொள்ளமுடிகிறது. மூன்றாவதாக மந்திரப்புத்தகத்தின் மூலம் மாணவர்கள் முன்னோக்கிய காலத்திற்கு சென்ற அனுபவம் நாம் புத்தகத்தை படிக்கும்போது நம்மையும் அந்த இட்த்திற்கு கொண்டு செல்கிறது கதை. முன்னோக்கிய காலத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கருத்தும் மிகவும் கவருகிறது.
ஒரே ஒரு ஊரிலே கதை படிக்கும்போது நம்முடைய பள்ளிப்பருவ காலம் கண்முன்னே தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்கு மாணவர்கள் மற்றும் நாய்க்குட்டி என கதை மிக சுவாரசியமாக உள்ளது. மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, அரண்மனை, நண்பர்கள், சுற்றுலா, கலாட்டா என குழந்தைகளுக்கே உரிய பண்புகளை கதையுடன் அழகாக எழுதியுள்ளார். நாய்க்குட்டியின் சுய அறிமுகம் மிகவும் அருமை. மாணவர்களின் மலை சுற்றுலா அந்த ரகசிய நீருற்று அனைத்து காட்சிகளும் கண்முன் நிற்கின்றன. அங்கே அவர்களுடன் உறவாடும் சிறுமி, கண்ணாமூச்சி விளையாட்டு என அற்புதமாக சுற்றுலா பயணம் நகர்கிறது.
இந்த புத்தகத்தின் மூலம் மாணவர்கள் நேரத்தினை தங்களுக்கேற்ப சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வளமாக வாழ வேண்டுமென்ற கருத்தினை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல பகிர்வு தகவலோடு புத்தகத்தின் சாற்றையும் சொல்லிட்ட வாணி.... நன்றி உனக்கு பாராட்டுக்களும் வாழ்த்தும் விழியனுக்கு..
ReplyDeleteஅழகான புத்தக விமர்சனம் வாணி
ReplyDeleteநல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு விழியனுக்கு நன்றி!!!!