Thursday, October 14, 2010

ராங் கால் ஜொள்ஸ்!

பாஸ் (எ) பாஸ்கரன்ல சொல்ர மாதிரி இந்த கணேஷும் என்னை புலம்ப வச்சிட்டு இருக்கான், காலைலேர்ந்து 10 மிஸ்டு கால்ஸ் 5 மெசேஜஸ் இவன் தொல்லை தாங்கலை.. எத்தனை ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் சில ஃப்ரண்ட்ஸ் பண்ர அலம்பல்

காலைல அவனுக்கு எதோ ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிட்டாளாம். அதுவும் இங்கிலிஷ்ல நம்ம தம்பிக்கு இங்கிலிஷ்ல கொஞ்சம் இல்லை ரொம்ப டல் தான். அவ்ளோ தான் போச்சு காலைலேர்ந்து பஸ்ல என்னைத்தவிர ஒருத்தரையும் விடக்காணோம், எல்லாரும் அந்த மெசேஜை படிச்சிட்டு எனக்கு தெரியாதுன்னு கையவிரிச்சிட்டாங்க. இவரு ஒரே ஃபீலிங்க்ஸ்ல அந்த பொண்ணு என்ன அனுப்பியிருக்குன்னு ஒன்னு புரியாம ஒருத்தனை ஒருத்தன் பாத்துகிட்டு முழிச்சது தான் மிச்சம். என்ன கொடுமைடா சாமி காலைலயே மண்டைய பிச்சிக்கிட்டு அலைஞ்சிருக்காங்க.

நல்லவேளை நான் மட்டும் காலைல பஸ் ஏறியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருப்பான். “ஹாய் அக்கா குட்மார்னிங்”னு சொல்லி மொக்கைபோட்டு கழுத்தறுத்திருப்பான். கடவுளா பாத்து இன்னைக்கு பஸ்சை நிறுத்தாம செஞ்சிருக்கார்.


ஆனா இந்த ஆசை நிலைக்கலையே, பஸ் நிறுத்தின அரைமணி நேரத்துலயே

ட்ரிங் ட்ரிங்................ கணேஷ் காலிங்

”என்னடா கணேஷ் சொல்லு”


”அக்கா எப்படி இருக்கே, சாப்பிட்டியா ஏன் இன்னைக்கு பஸ்ல வரல”

ஆரம்பிச்சிடாண்ட இவன் மொக்கையைன்னு நினைச்சிக்கிட்டேன்.


”நல்லா இருக்கேன் சாப்பிட்டேன் பஸ் இன்னைக்கு என் ஸ்டாப்ல நிறுத்தவே இல்லடா அதான் வரலை ஆமா நீ எதோ மெசேஜ் புரியலைன்னு சிவாகிட்ட சொன்னியாமே என்னடா மெசேஜ் அது”


”அக்கா ஆமாம் அந்த மெசேஜ் யாரோ ஒரு பொண்ணு அனுப்பிச்சு என்னன்னு தெரியலை”

“பொண்ணா! என்னடா சொல்ரே யாருன்னு தெரியுமா, தெரியலைன்னா போன் பண்ணி கேக்கவேண்டியது தானே?”

“தெரியல அக்கா அந்த பொண்ணு பேரே சொல்லலை ஊரும் சொல்லலை ஆனா காலேஜ் மட்டும் படிக்கிரேன்னு சொல்லுச்சு”


”எந்த காலேஜ்ன்னாச்சும் கேட்டியாடா! உனக்கு பயமா இருந்தா என்கிட்ட நம்பர் குடு கேக்குரேன்”

”வேணாம் அக்கா நீ பேசாதே அப்ரம் அந்த பொண்ணு மெசேஜ் பண்ரதைகூட நிறுத்திடும் ஹி ஹி மெசேஜ்க்கு அர்த்தத்தை மட்டும் சொல்லு அதான் புரியலை”

”டேய் லூசாடா நீ பேரும் தெரியலை ஊரும் தெரியலை எவளோ ஒருத்தி அனுப்பின மெசேஜை டெலிட் பண்ண வேண்டியது தானே”

“இல்லக்கா அதுல கடைசியில மட்டும் ”மஸ்ட் ரிப்ளை மீ”ன்னு இருந்துச்சு அப்படின்னா நாம ரிப்ளை பண்ணி தானே ஆகனும் அதானால அதை மட்டும் சொல்லு”

“என்ன கருமமோ மெசெஜை அனுப்பித்தொலை சொல்ரேன்”

கொஞ்ச நேரத்தில் மெசெஜ் பறந்து வந்தது. மத்த நேரத்துல ஒரு குட்மார்னிங் சொல்லக்கூட இவனுங்ககிட்ட பேலன்ஸ் இருக்காது இப்ப மட்டும் எப்படியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


“If u get a chance to convert me into non-living thing and keep it with u ,what would u turn me into and why?”

அட பன்னாடை பயலுவலா டேய் இந்த மெசேஜாடா புரியலை உங்களுக்கு என்னத்த பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சு கிழிச்சீங்களோ!!

ம்ஹ்ம் அனுப்பின அரை செகண்ட்லயே மறுபடியும் போன்.......

கட் செய்துவிட்டேன் இன்னும் மெசேஜை முழுசாகூட படிச்சு முடியலை அதுக்குள்ள என்ன தான் அவரசமோ!!

அதுக்குள்ள வேர வேலை வந்துடுச்சுன்னு எட்டிபாக்கரதுக்குள்ள எட்டு மெசேஜ்

நானே போன் பண்ணி “டேய் அது வேர ஒன்னுமில்லைடா அந்த பொண்ணை உயிரில்லாத பொருளா மாத்தி உன் கைல வச்சிக்கிட்ட என்ன பொருளா மாத்துவே ஏன்’னு கேட்டிருக்கா அவ்ளோ தாண்டா”

“அப்படியா அப்படின்னா நான் இப்பவே ரிப்ளை பண்ணிடுறேன் அக்கா”

“டேய் ஊர்பேர் தெரியாத பொண்ணுக்கு என்னடா ரிப்ளை பண்ணுவே”

“ஹி ஹி ஹி எதோ ஒன்னு பண்ணப்போறேன் அக்கா”


“டேய் ஏடாகூடமா எதாவது அனுப்பி இன்னைக்கு பல்புவாங்கப்போறே தெரியாத நம்பர்க்கெல்லாம் பதில் அனுப்பாதேடா”

“இல்லக்கா அந்த பொண்ணு என் பேரை தெளிவா சொல்லுதே”

”எப்படியோ போய் தொலை என்றேன்”

”ஹி ஹி ஹி சரிக்கா “என்று வைக்கிறேன் என்று கூட சொல்லாமல் வைத்துவிட்டான்.

பயபுள்ளை பல்பு வாங்கும்னு பாத்தா அந்த பொண்ணை மடக்கிட்டு வந்து நிக்குது.

மறுநாள் போன் செய்தான் “அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா நீ சொன்னதை வச்சு அப்படியே ஒரு கவிதை மாதிரி எழுதிட்டேன் பொண்ணு க்ளிக் ஆகிடுச்சு” என்றான்.


“டேய் என்னடா இதெல்லாம் களவாணிப்பயலே இதெல்லாம் தேவையாடா உனக்கு, சரி நீ என்னன்னு ரிப்ளை பண்ணீனே அதைச்சொல்லு முதல்ல”“சரிக்கா சொல்ரேன் என்ன திட்டக்கூடாது சரியா” என்று பால்வடியும் முகத்தோடு கேட்டேன்“சரி சொல்லித்தொலை நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்று அரக்ககத்தினேன்.........

“ம்ம்ம்க்ர்ம்ம்....” என்று தொண்டையை சொருமிக்கொண்டு மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்“மலரென்று சொன்னால்

காய்ந்துவிடுவாய்

நிலவெனச்சொன்னால்

தேய்ந்துவிடுவாய்

என் மூச்சென சொன்னால்

அரைநொடியில்

என்னிலிருந்து விலகிவிடுவாய்என் இதய துடிப்பினில்

இடைவெளியிலும் நீயே

நிறைந்திருக்கிறாய்

உனை ஒப்பிட்டு பார்க்க

எனக்கேதும் தெரியவில்லை

என்றும் என்னுடன் வாழும்

கடவுளாய் உன்னை மாற்ற

விரும்புகிறேன்”

”எதோ கொஞ்சமா இதை தான் அக்கா கிறுக்கினேன்” என்று எதுவும் தெரியாத பிள்ளைபோல கூறினான்.

“அடடா டேய் பயபுள்ளை தெரியாத பொண்ணுகிட்ட நல்லாவே லாக் ஆகியிருக்கான்” என்று புரிந்துகொண்டு


”எப்படியோ நல்லா இருந்தா சரி தான் போடா” என்று துரத்திவிட்டேன்.....

இந்த பயலுங்ககிட்ட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிரத விட எங்கயாச்சும் ஓடிபோய்டலாம் தொல்லைதாங்கலைடா சாமி!! ஹையையையையோ!!! :))

10 comments:

 1. :) ஹஹ.. கலக்குறாங்க..

  ReplyDelete
 2. //ட்ரிங் ட்ரிங்................ தினேஷ் காலிங்

  ”என்னடா கணேஷ் சொல்லு”//

  கால் பண்ணது, கணேஷா இல்ல திணேஷா?

  கவுஜ அருமை...

  //என்றும் என்னுடன் வாழும்

  கடவுளாய் உன்னை மாற்ற

  விரும்புகிறேன்”//

  அப்போ அந்தப் பொண்ண பாக்கவே முடியாதா?
  :)))

  ReplyDelete
 3. சந்தோஷ் நன்றி :)


  கணேஷ் தான்// தஞ்சாவூர்கார் :)

  நாகை சிவா
  வரவிற்கு நன்றி :)

  ReplyDelete
 4. romba realistica iruku nalla iruku...

  ReplyDelete
 5. சூப்பர் வாணி அழகா தொடுத்து இருக்க நிகழ்வோ கதையோ எதாயிருந்தாலும் சூப்பர்டா...

  ReplyDelete
 6. நிகழ்வுகளில் சிறுமாற்றத்துடன்.... கதையோட்டத்தில் என்னையும் அழ்காய் பொருத்தி கொள்ள முடியும்...அந்த கவிதை ரொம்ப ரொம்ப அழகுங்க!!!!

  ReplyDelete
 7. supera erukku...:)))

  ReplyDelete
 8. //இந்த பயலுங்ககிட்ட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிரத விட எங்கயாச்சும் ஓடிபோய்டலாம் தொல்லைதாங்கலைடா சாமி!! ஹையையையையோ!!! :))//
  etho oru ulaviyal pathippaga theriyavillai? thavarendral sarippaduththa vendava?
  poluran

  ReplyDelete