Tuesday, June 8, 2010

ஊக்கமது கைவிடேல்

இதுவரைக்கும் உருப்படியான பதிவுன்னு ஒன்னையும் போட்டதில்லை. ஆதவன் சார்பா பரீட்சைன்னு ஒரு உருப்படியான பதிவு போடலாம்னா அதுவும் லேட் L. மன்னிக்கவும் நண்பர்களே! அருமை நண்பர் ஆதவன் ஐயா எக்ஸாம் பதிவை போட்ட நேரம் எனக்கு எக்ஸாம் இருந்த்தால் பதிவு எழுத நேரமில்லை.

இந்த வாரம் தான் எல்லா (ரெகுலர் எக்ஸாம் + அரியர்ஸ்) எக்ஸாமையும் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். எக்ஸாம் எழுதின கையோட இந்த எக்ஸாம் பதிவையும்ம் கொஞ்சம் முடிச்சிடலாம்னு இந்த பதிவு.

எக்ஸாம் பத்தி எழுதனும்னா நிறைய எழுதிக்கிட்டே போகலாம் ஆனாலும் நான் மொக்கை போட விரும்பலை. கொஞ்சமா எழுதிட்டு போய்டுரேன்.

காலாண்டு ஒரு பெருங்குற்றம்
அரையாண்டு ஒரு பாவச்செயல்
முழுஆண்டு ஒரு மனித தன்மையற்ற செயல்

இப்படியெல்லாம் பரீட்சைய குறை சொல்லிக்கிட்டு படிக்காம அரட்டை அடிச்சுட்டு வெட்டியா இருந்தாலும் சுமாரா பாஸ் பண்ணி எந்த வகுப்புலையும் கோட்டடிக்காம எல்லா க்ளாஸையும் தாண்டி வந்தாச்சு! ஆனா பாருங்க பள்ளிக்கூடத்துல அரியர்ஸ் வைக்காம ஒழுங்கா படிச்சுட்டு வந்த புள்ளை காலேஜ்னு வந்ததும் அரியர்ஸ் வச்சிட்டேன்.

யூ.ஜில படிக்கவே கூடாதுங்கி முடிவோட தான் காலேஜ்ல அடியெடுத்து வச்சேன். (அது ஒரு தனிக்கதை, நினைச்சது கிடைக்கலைன்னு ஒரு வருத்தம்.) எங்க வீட்ல அப்பாவும் அம்மாவும் ”படிக்கலைன்னாலும் பரவால்லம்மா நீ காலேஜ்க்கு போய்த்தான் ஆகனும்”னு துரத்திவிட்டு அப்புறம் எக்ஸாம் வந்த்தும் படி படின்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி பாஸ் பண்ண வச்சிட்டாங்க. ஆனாலும் விடுவேனா என்னோட ஆசைக்கு ஒரே ஒரு அரியர்ஸ் வச்சிக்கிட்டேன். ஏன்னா அரியர்ஸ் இல்லாத படிப்பு அரைபடிப்பாம் என்னோட சீனியர்ஸ் அட்வைஸ் இது.

வாழ்க்கைல பிறப்பு இறப்பு இளமை முதுமை இது எல்லாமே ஒரே ஒரு முறை தான். ஆனா இந்த எக்ஸாம்ஸ் இருக்கே... ஹப்பா! படுதொல்லை வருசா வருசம் வந்து தொலையும். இந்த எக்ஸாம் எழுத முறையை மட்டும் எவன் தான் கண்டுபிடிச்சானோ, அவன் மட்டும் கிடைச்சா ஒரு வழி பண்ணிடுவேன். கிட்டதட்ட என்னை மாதிரி படிக்காத பசங்க எல்லோரும் இந்த டயலாக்கை அவங்க படிக்கி காலத்துல ஆயிரம் முறை சொல்லி கொட்டாவி விட்டு, கடைசி பென்ச்ல தூங்கியிருப்பாங்க. கண்டுபிடிச்சவன் கிடைச்சுட்டாலும் படிக்காத சில பேரால அந்த ஒருத்தனை என்ன தான் செய்ய முடியும். :-( 

போன வாரம் நடந்த எக்ஸாம் உண்மையிலே ரொம்ப வித்தியாசமா இருந்து. எப்படின்னா, இதுவரைக்கும் எழுதின எக்ஸாம்ஸ்க்கெல்லாம் ஒரளவுக்காவது புக்கை தொட்டிருப்பேன். ஆனா இந்த தடவை, சுத்தம் சோறு போடும்னு எக்ஸாம் எழுத புக்கையே நிறைய தடவை தொலைச்சு எக்ஸாம் அன்னைக்கு கண்டுபிடிச்சு ஜஸ்ட் 4 மணி நேரம் படிச்சு(?!) எழுதினேன். இப்பல்லாம் புக்கை தொட்டாலே நல்லா கொட்டாவியும் அதுக்கு இலவச இணைப்பா தூக்கமும் வந்துடுது. ஒரு புத்தகம் ஆயிரம் தாய்மார்களுக்கு சமமாம் தூங்க வைக்கிறதுல.தூக்கம் வராதவங்களுக்கு என்னோட அட்வைஸ் பாடபுத்தகம் படிங்க நல்லா தூக்கம் வரும்.

இந்த எக்ஸாம் பயமெல்லாம் பள்ளிக்கூடம் வரைக்கும் தான். அரக்கபறக்க ஒரு எழுத்துவிடாம படிச்சு, எக்ஸாம்ல என்ன கேள்வி கேப்பாங்களோன்னு பயத்தோட போய் அதில வர கேள்விகளுக்கு அரைகுறையா சந்தேகத்தோட பதிலை எழுதி, நேரம் பத்தாம கடைசியில அந்த கேள்வி தப்புன்னதும் தலையணை பாதி நனைய அழுது தீர்த்து அப்ப்ப்பா...... எத்தனை பயம் ஸ்கூல்ல படிக்கும் போது மட்டும்.

ஆனா இப்பல்லாம் அந்த பயமே இல்லை ஏன்னா நாம தான் படிக்கதே இல்லையே! டிகிரி வாங்கனும்னு எதாவது ஒரு கோர்சுக்கு அப்ளிகேசனை போட வேண்டியது. புக்கை வாங்கி மேல் பரண்ல போட்டு வச்சிட வேண்டியது. பிசிபி க்ளாசை பாதி நாள் அட்டெண்ட் பண்ணி அதுலயும் தூங்கி வழிஞ்சு ஆபிஸ்ல இருக்க ஆணியை புடுங்கவே நேரம் சரியா இருக்கும். அப்புறம் ஒரு நாளோ, இல்லை ஒரு மணி நேரமோ படிச்சு மூணு மணி நேர எக்ஸாமை எழுதிட்டு வந்து அரியர்ஸ் வைக்க வேண்டியது. இதுவே வேலையாப்போச்சு!

ம்ஹ்ம்ம்ம்ம்... நாங்களும் எக்ஸாமுக்குப் படிக்கிறோம். அதனால நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ்.....

6 comments:

  1. தீண்டாமை ஒரு பாவச்செயல்
    தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
    தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

    இந்த மேட்டரை போட்ட விதம் அருமை...

    எங்க சீனியரும் சொன்னாங்க நான் என்ஜியர் படிக்கும் போது, "அரியர் வைக்காத என்ஜினியர் அரை என்ஜினியர்"னு

    பழைய நினைவுகளை கிளர வைத்தது வாணி உன் பதிவு.

    ReplyDelete
  2. சூப்பரு... இந்த ப்ளாக்கை எப்படி தவற விட்டேன் இத்தனை நாள் ?

    ReplyDelete
  3. ஒளிமயமான எதிர்காலம்(ரிசல்ட்) உன் பதிவில் தெரிகிறது...
    ஹா ஹா ஹா

    நல்லா ரசிக்கும் படியா இருக்குப்பா

    ReplyDelete
  4. pine ean padikanum vera ethavathu urppadiyana vellai maikka poiirrukalam ha ha ha ha

    ReplyDelete
  5. intha blogger ingathan irukkanglaaa... mmm... address noted

    ReplyDelete
  6. //4 மணி நேரம் படிச்சு//

    ithu pothatha book ah karachu kudikka:-)

    ReplyDelete