Tuesday, June 15, 2010

வெண்பா ஓரு குறும்பயணம்

வெண்பா அமைத்தலில் முதன்மையாக நாம் அறிவது

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

எழுத்து என்பது உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மற்றும் இவையிரண்டு சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

எழுத்தாலானது அசை.எழுத்துக்களை கூறும்போது ஏற்படும் ஒலிகளை வைத்து பிரிப்பது ஆகும். இதில் குறில் நெடில் என இருவகையாக பிரிக்கலாம்.

அசை என்பது நேரசை நிரையசை என இருவகைப்படும் நேரசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி ஓரெழுத்தும் நிரையசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி இரண்டு எழுத்துக்களும் பெரும்.

நேரசை:

நேரசை என்பது குறில் தனியாகவும், குறில் ஒற்றெடுத்தும், நெடில் தனியாகவும், நெடில் ஒற்றெடுத்தும் வருவது நேரசையாகும்.

      எ.கா: வாழ்/க - நெடில் ஒற்று / குறில் தனித்து வந்த நேரசை

நிரையசை:
குறில் இணை தனியாகவும் குறில் இணை ஒற்றெடுத்தும் குறில்நெடில் தனியாகவும் குறில்நெடில் ஒற்றெடுத்தும் வருவது நிரையசை ஆகும்.

          எ.கா: வளர்/க - குறில் இணை ஒற்றெடுத்து வந்த நிரையசை

சீர்:

சீர் என்பது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நான்கசைச்சீர் என நான்கு வகைப்படும்

ஓரசைச்சீர் என்பது ஈற்றடிச்சீராக மட்டுமே வரும்

நேர் – நாள்

நிரை – மலர்

    எ.கா: பால் – நேர்

               தவில் - நிரை

ஈரசைச்சீர் என்பது

நேர் நேர் – தேமா - இயற்சீர்

நிரை நேர் – புளிமா மாச்சீர்

நிரை நிரை – கருவிளம்

நேர் நிரை – கூவிளம் விளச்சீர்

                எ.கா: சீ/ மா நேர் நேர்

                          சினி/மா நிரை நேர்

                         கரி/நாய் நிரை நிரை

                          சீ/மான் நேர் நிரை

மூவசைச்சீர் என்பது

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நிரை நேர் நேர் – புளிமாங்காய் - காய்ச்சீர்

நிரை நிரை நேர் – கருவிளங்காய் - வெண்சீர்

நேர் நிரை நேர் - கூவிளங்காய் வெண்பாவுரிச்சீர்

                   எ.கா: பா/கற்/ காய் – நேர் நேர் நேர்

                              கனல்/கண்/ணன் – நிரை நேர் நேர்

                               சிவந்/தகன்/னம் நிரை நிரை நேர்

                                கண்/ணடித்/ தல் நேர் நிரை நேர்

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

நேர் நிரை நிரை – கூவிளங்கனி

                  எ.கா: கண்/ணின்/மணி நேர் நேர் நிரை

                             திரு/மா/லினை நிரை நேர் நிரை

                             திரு/முறை/களை நிரை நிரை நிரை

                             சல்/லடை/யெடு நேர் நிரை நிரை

தளை:

வெண்பாவிற்கு தேவையான தளைகளை மட்டும் பார்ப்போம்

மா முன் நிரை

விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை

          எ.கா: மாய / வனைக்கண்டால் - மா முன் நிரை -இயற்சீர் வெண்டளை

                     மலர்களை/ போல் - விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

            கண்ணிரண்டில் / மையிட்ட – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

அடி:

இருசீரடி – குறளடி

                எ.கா: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

                            இறைவன் அடிசேரா தார்

முச்சீரடி – சிந்தடி

                          எ.கா: நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்

                                      பிறநாட்டுப் பெண்டிட் முடிநாறும் பாரி

                                      அறநாட்டுப் பெண்டி ரடி.

நாற்சீரடி – அளவடி, நேரடி

              எ.கா: கொடுக்கின்றி வந்த விஷமதை வைக்க

                          நடுத்தொண்டை கண்டான் நயந்து -நடுவில்நான்

                          உள்ளதைக் கேட்டால் உவப்பின்றி சொல்லிடும்

                          சொள்ளையான காரணம் ஏன்

வெண்பா என்பது

வெண்பா என்பது ஈற்றடி சிந்தடியாகவும் மற்றைய அடிகள் அளவடிகளாகவும் வரும். இயற்சீர் வெண் சீரும் மட்டுமே வரும் மற்ற சீர்கள் எதுவும் வருவதில்லை.

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை தளைகளாக வரும். முடிவாக கடைசி அடியின் ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என்று முடியும்.

வெண்பாவில் ஆறுவ்கையான வெண்பாக்கள் உள்ளன. (குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா ,நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா)

மேற்கண்ட இலக்கணத்தை முறையான பயிற்சியோடு பழகினால் வெண்பா எழுதுவது எளிதாகும்.

7 comments:

  1. சூப்பர். நல்ல எடுத்துக்காட்டோட பதிவு.

    ReplyDelete
  2. ஆசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கும் கவிதாயினிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு கவிதா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பதிவு கவிதா. வாழ்த்துகள்

    ReplyDelete