முத்து முருகேசுன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்களாம். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸாம். பள்ளிக்கூடம், காலேஜ், கேண்டீன் சினிமா எங்கே போனாலும் ஒன்னா தான் போவாங்களாம்
ஒரு நாள் ரெண்டு பேரோட பேமிலிஸும் டூர் போகனும்னு ப்ளான் பண்ணாங்களாம், ஆனா முத்து கடைசி நேரத்துல வர முடியாம நின்னுட்டார். முருகேசு டூரை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தாராம்.
அதுக்கப்புறம் ஒரு நாள் முருகேசு, முத்துவோட வீட்டுக்கு போனாராம், அங்கே முத்துவை பாத்து “ஏண்டா நீ டூருக்கு வரலை”ன்னு சண்டை போட ஆரம்பிச்சிட்டாராம்...
அடடே இதென்ன வம்பா போச்சுன்னு முத்து “இல்லடா எனக்கு உடம்பு சரியில்லை அதான் வரமுடியலை”ன்னு சமாதானம் சொல்ல ஆரம்பிச்சாராம்...
”அதெல்லாம் எனக்கு தெரியாது நீ ஏண்டா ப்ளான் பண்ணின டூருக்கு வரலை”ன்னு மல்லுக்கு நின்னு சண்டை போட்டராம் முருகேசு
இப்படியே சண்டை அதிகமாகி ரெண்டு பேரோட சட்டையும் கிழிஞ்சு போச்சாம்....
தத்துவம்: சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும் சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு.
____________________________________________________________________________
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.
ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..
குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..
“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.
குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..
அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்
கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...
இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை :))