Wednesday, January 9, 2013

தீபாவளி இலவசங்கள்:

இந்த காலத்துல இலவசங்களுக்காகவே பொருட்களை வாங்குரவங்க நிறைய பேர் இருக்காங்க. கிட்டத்தட்ட (ஆட்டோமொபைல் தவிர) எல்லா பொருட்கள்லயும் இலவசம் இலவசம், குண்டூசியிலேர்ந்து லேப்டாப் வரைக்கும் டிவியில வர எல்லா விளம்பரத்துலயும் இலவசம், இந்த உலகம் அத்தியாவசிய பொருளுக்கு அடிமையாகிருக்கோ இல்லையோ இலவசங்களுக்கு அடிமையாகிப்போச்சு! திருவிழாக்கள், பண்டிகைகள், சில சுபதினங்கள் இப்படி எல்லாத்துக்குமே இலவசங்கள்.நாமெல்லாம் டிவி நிகழ்ச்சிகளை பாக்கும்போது நடுவிலே இந்த மாதிரி விளம்பரங்கள் இறக்கைகட்டிகிட்டு வரும் போது வெறுத்து போய்டுரோம், எல்லா சேனல்கள்லயும் விளம்பரங்கள் படாதபாடு படுத்திட்டு இருக்கு இருந்தாலும் இந்த தீபாவளிக்கு நான் பார்த்த வரைக்கும் யார் யார் என்னென்ன இலவசங்கள்னு பாப்போம் சில சின்னசின்ன விளம்பரங்கள்:



ஒரு அரிசி கம்பேனி விளம்பரம்:



எங்களிடம் அரிசி வாங்கினால் 75கிலோ மூட்டைக்கு ஒரு புடவை 50கிலோ மூட்டைக்கு இரு சுடிதார் 25கிலோ மூட்டைக்கு ஒரு சர்ட் இலவசம் முந்துங்கள் இச்சலுகை தீபாவளி வரை மட்டுமே!!



நம்ம ஐடியா : இது நல்ல ஆஃபர் தீபாவளிக்கு தனியா துணி எடுக்க போகவேணாம் பாருங்க!



ஒரு எண்ணெய் விளம்பரம்:



எங்களிடம் நல்லெண்ணெய், கள்ளெண்ணெய், தேங்காய் எண்ணெய் என அனைத்துவகையான எண்ணெய் பொருட்களும் கிடைக்கும், இதற்கு இலவசமாக தோசைக்கரண்டி ஜல்லிக்கரண்டி சாப்பாட்டுகரண்டி குழிக்கரண்டி பொறியல்கரண்டி இவற்றில் ஏதாவது ஒன்று இலவசம்



நம்ம ஐடியா: பணியாரம் சுட எல்லா கரண்டியும் வாங்கிவைக்கனும்



ஒரு துணிக்கடை விளம்பரம்:



எங்களது கடையில் சிறுவர்முதல் பெரியவர் வரை அனைத்து வயதிற்க்கான துணி வகைகளும் கிடைக்கும் எங்களது கடையில் மூன்று ஆடைகள் வாங்கினால் மூன்று ஆடைகள் இலவசம்



நம்ம ஐடியா: ஹே ரமேஷ் கணேஷ் தினேஷ் நீங்க யாரும் துணி எடுக்கவேணாம் நானே மூணு சுடிதார் வாங்கினா மூணு சர்ட் வாங்கிக்கலாம்



எங்க ஊரு விளம்பரம்:



எங்களது கடையில் அனைத்துவிதமான ஃப்ரிஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர் வீட்டு வசதிக்கான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும், மற்றுமொரு நற்செய்தி ஒரு ஃப்ரிஜ் வாங்கினால் ஒரு வாஷிங்மெஷின் இலவசம்



நாங்க: அடடே வட போச்சே! போன பொங்கலுக்கு தான் ஃப்ரிஜ் வாங்கினோம்