Friday, July 9, 2010

வடை பாயாசம் ரிட்டன்ஸ்..

நேற்று மாலை நடந்த சம்பவம்....................

வழக்கம்போல போற பஸ்ஸை மெதுவா போய் மிஸ் பண்ணிட்டேன். 5 நிமிசம் அடுத்த ஸ்டாப்பிங்ல நிக்கும்ங்கிர தைரியம் தான். அந்த பஸ்ஸை எப்படியாச்சும் பிடிக்கனும்னு ஆட்டோவிலே போய் பாதிவழியிலயே நான் போகவேண்டிய பஸ்ஸை பிடிச்சிட்டேன் . நான் ஏறாத வரைக்கும் காலியா இருந்த பஸ் நான் ஏறின ஸ்டாப்பிங்க்ல நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. ஒரு வழியா கண்டக்டர்கிட்ட சொல்லி சீட்டை போட்டு என் ஃப்ரண்ட்ஸோட ஐக்கியமாகிட்டேன். என் ஃப்ரண்ட்ஸ் குரூப்ல நிறைய பேர் நேத்து மிஸ்ஸிங். ஒரே ஒரு அக்கா ரோகிணி மட்டும் இருந்தாங்க அவங்க கிட்ட மட்டும் ஸ்மைல் பண்ணிட்டு பக்கத்துல உட்கார்ந்துகிட்டேன்.

ஏறினதும் கூட்டமான பஸ்ஸைபாத்து கொஞ்சம் பயந்து அமைதியா அவங்களை எல்லாம் பாத்துட்டு இருந்தேன்.

ரோகினி அக்கா ”ஏம்மா அமைதியா இருக்கே ஆபிஸ்ல ரொம்ப வேலையான்னு கேட்டாங்க”,

“ஆமாம் அக்கா ரொம்ப ஆணி(?!) எல்லாத்தையும் புடுங்கிட்டு வரதுக்குள்ள பசியெடுக்க ஆரம்பிச்சிட்டது அதான் அமைதியா உட்கார்ந்திருக்கேன்”னு சொன்னேன்.

அவங்களும் ”சரிம்மா”ன்னு பதிலுக்கு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அமைதியாகிட்டாங்க.

வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த நேரத்துல தான் அந்த வாசனை வர ஆரம்பிச்சது, ரெண்டு பேருக்கும் நூறுவாட்ஸ் பல்பு போட்டமாதிரி ஒரு சந்தோசம். முதல்ல நான் தான் ஆரம்பிச்சேன்

எல்லாம் பசிமயக்கத்தோட விளைவு

“ எங்கேயோ வடைபாயாசம் வாசனை வருது ரோகினி அக்கா”

“ அட ஆமாம் யாரோ பஸ்ல பார்சல் பண்ணி எடுத்து வந்திருக்காங்க போல”

கொஞ்சம் ஆவலோட அந்தக் கூட்டத்துலையும் வடைபாயாச வாசனையுள்ள பையை தேட ஆரம்பிச்சிட்டோம்.

எங்கே எங்கேயிருக்கு அந்த பை. கொஞ்ச நேரம் நல்லா தேடியும் கண்ணுக்கு படவேயில்லை அந்த பை

”அடடா அக்கா பசிநேரத்துல எவ்ளோ சூப்பரா வடைபாயசம் செஞ்சு எடுத்துட்டு வந்திருக்காங்க வாசனை மூக்கை துளைச்சு பசியை கிளப்புதே!” கொஞ்சம் வருத்தமாவும் சொல்லிக்கிட்டேன்.

”சரி இரு கண்ணுலயாச்சும் பாத்துக்கலாம்” னு தேடு தேடுன்னு தேடுரோம் பை மட்டும் கிடைச்சபாடில்லை.ம்ஹ்ம்ம்ம் வாசனையை மட்டும் வாசிச்சுகிட்டு உட்கார்ந்திருந்தோம்.

அடுத்த 3 நிமிசத்துல வடைபாயாச வாசனை போய்டுச்சு, அடடே! ”அக்கா எங்கே வடைபாயாச வாசனை காணோம்”னு பேசிட்டு இருந்தோம். திரும்பி பாத்தா வடைபாயாச பை வைக்க பஸ்ல இடம் இல்லைன்னு கண்டக்டர் இறங்க சொல்லிட்டாராம். அந்த பை வச்சிருந்த அம்மாவும் கிழே இறங்கிட்டாங்க. நாங்க “வடபாயாசம் போச்சே!”ன்னு இஞ்சி தின்ன குரங்குஸ் மாதிரி அமைதியாகிட்டோம்.

அடுத்த நிமிசத்துலயே மறுபடியும் வடபாயாச வாசனை

“ அக்கா வடைபாயாசம் ரிட்டன்ஸ்”ன்னேன் ரோகினியக்கா ரொம்ப சந்தோசமாகிட்டாங்க. வடைபாயாச அம்மா எப்படியோ கண்டக்டர்கிட்ட சண்டைபோட்டு மறுபடியும் பஸ்ல ஏறிட்டாங்க.

கண்டக்டர்கிட்ட “அந்தம்மாக்கு பை வச்சிக்க கஷ்டமாயிருந்தா எங்ககிட்ட குடுங்க அவங்க இறங்கர வரைக்கும் நாங்க வச்சிக்கிறோம்” ஒரு பிட்டை போட்டோம்.

அவரும் அந்த வடைபாயாச அம்மாமேல எறிஞ்சி விழுந்து ”பையை குடும்மா உன் பை வைக்கிர இடத்துல ரெண்டு பேரு நிக்கல்லாம் ஏன் இப்படி எங்க உயிரை வாங்குரத்துக்குன்னே வறீங்க”ன்னு சொல்லி பையை வாங்கி குடுத்தார்.

ஹப்பா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோசம். அந்த வடைபாயாச பை எங்ககிட்ட வந்ததும் ஒரே கொண்டாட்டம் தான். அக்கா பையே நம்மகிட்ட வந்தாச்சு அந்தம்மாவுக்கு தெரியாம ஒரு ஓட்டைபோட்டு ரெண்டு வடைய சுடுங்கன்னு சொன்னேன். ரோகினி அக்கா சிரிச்சிட்டு அந்தம்மா வந்தாங்கன்னா நம்மளை திட்டுவாங்க வேணாம் வாசனையை மட்டும் பாத்துக்கோ’ன்னு சொன்னாங்க

அடுத்தடுத்த ஸ்டாப்பிங்ஸ்ல கொஞ்சம் ஜனத்தொகை கம்மியாச்சு வடைபாயாச அம்மா பக்கத்துல வந்து நின்னுகிட்டாங்க.

நாங்க வடைபாயாச வாசனை நுகர்ந்து கமெண்ட் பண்ணிட்டு இருந்ததை பாத்து முகம் சுழிச்சாலும் நாங்க இறங்குரதுக்குள்ள ஒரு வடை குடுத்துட்டாங்க.

ரோகினி அக்காவும் நானும் ரொம்ப சந்தோசமாகிட்டோம். இத்தனை நாள் பஸ் பயணத்துல நேத்து வடைபாயாசம் வாசனை மாதிரி எப்பவுமே வந்ததில்லை.